For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதியவர்கள் பலி... ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சி ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

ஒஸ்லோ: அதிக வயதானவர்களுக்கும் பலவீனமாக இருப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவது ஆபத்தானது என்று நார்வே ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. தற்போது வரை உலகெங்கும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளும் கொரோனா ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.

கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ! கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!

ஃபைசர் தடுப்பூசி

ஃபைசர் தடுப்பூசி

கடந்த மாதம் ஃபைசர் தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு முதலில் பிரிட்டன் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. குறிப்பாக, உலக சுகாதார அமைப்பும் ஃபைசர் தடுப்பூசியின் அவரசகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.

23 பேர் பலி

23 பேர் பலி

இந்நிலையில், நார்வே நாட்டில் ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் வயதானவர்கள் என்று குறிப்பிட்ட சுகாதாரத் துறையினர், தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் ஏற்படும் சாதாரண பக்க விளைவுகளைக்கூட அவர்களின் உடல்களால் தாங்க முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

மிகவும் பலவீனமாக உள்ளவர்களுக்கு லேசான தடுப்பூசி பக்க விளைவுகளும்கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். மேலும், வயதில் மூத்தவர்களுக்கும் மிகக் குறுகிய ஆயுட்காலம் உள்ளவர்களுக்கும், தடுப்பூசியால் ஏற்படும் நன்மை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாதுகாப்பை உறுதி செய்வது கடினம்

பாதுகாப்பை உறுதி செய்வது கடினம்

வயதானவர்களுக்குத் தடுப்பூசி காரணமாகச் சற்று அதிக பாதிப்புகள் ஏற்பட்டாலும்கூட, இதைக் காரணமாகக் கூறி வயதில் குறைந்தவர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுகக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் புதிய தலைவரான எமர் குக், புதிய ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பது என்பது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.

10 லட்சம் நபர்களில் 11.1 பேருக்குப் பக்க விளைவுகள்

10 லட்சம் நபர்களில் 11.1 பேருக்குப் பக்க விளைவுகள்

மேலும், தற்போது நார்வே நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து ஃபைஸர் நிறுவனமும் ஆய்வு செய்து வருகிறது. இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் ஆபத்தான அளவு அதிகமாக இல்லை என்றும் இவை எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 10 லட்சம் நபர்களில் 11.1 பேருக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸில் உயிரிழப்பு

பிரான்ஸில் உயிரிழப்பு

அதேபோல பிரான்ஸ் நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட முதியவர் ஒருவர், அடுத்த இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்தார். தடுப்பூசி குறித்து நம்பகத்தன்மையை இச்சம்பவம் கேள்விக்குள்ளாக்கியது. இருப்பினும், உடல்நிலை காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும், தடுப்பூசிக்கும் உயிரிழப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் விளக்கம் அளித்தனர்.

காரணம்

காரணம்

ஃபைசர் நிறுவனத்தின் மூன்றாம் கட்ட தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற வயதானவர்களின் சராசரி வயது 50 முதல் 55 வரையாகும். இருப்பினும், தற்போது 80 வயதைக் கடந்தவர்கள் சிலருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் முடிவுகள் எதிர்பார்த்தது போல இல்லாமல் சற்று மாறலாம். நார்வே நாட்டில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு உயிரிழந்தவர்களில் 16க்கும் மேற்பட்டவர்கள் 80 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Norway said Covid-19 vaccines may be too risky for the very old and terminally ill, the most cautious statement yet from a European health authority as countries assess the real-world side effects of the first shots to gain approval.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X