For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைகீழாதான் குதிப்பேன்.. கவுண்டமணி மாதிரி பந்தயம் கட்டி.. 89 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர்!

Google Oneindia Tamil News

ஒஸ்லோ: நண்பர்களிடம் பந்தயம் கட்டி, சுமார் 89 அடி உயர கிரேனில் இருந்து இளைஞர் ஒருவர் குதிக்கும் அதிர்ச்சி தரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நார்வே நாட்டில் மோஸ் என்ற இடத்தில் நீர் தொடர்பான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது சுமார் 89 அடி உயர கிரேனில் இருந்து எமில் லிபெக் என்ற இளைஞர் கடலில் குதித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

norwegian death diver bellyflops off a 89ft shipping container crane

நண்பர்களிடம் பந்தயம் கட்டியதால் அவ்வளவு உயரமான இடத்தில் இருந்து எமில் குதித்ததாகக் கூறப்படுகிறது. நல்லவேளையாக எமில் கடலில் குதித்ததால், காயமின்றி உயிர் தப்பினார். முதலில் தலைகீழாக குதிக்கத்தான் எமில் முயற்சித்துள்ளார். பின்னர் வேகம் காரணமாக நடுநாயமாக அவர் கடலில் குதித்துள்ளார்.

இந்த விபரீத முயற்சி, நீர் விளையாட்டு போட்டியை விளம்பரபடுத்துவதற்காக நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்காக இப்படியா விபரீத செயலில் ஈடுபடுவது என எமிலை அனைவரும் திட்டி வருகின்றனர்.

தற்போது கண்டெய்னர் கிரேனில் இருந்து எமில் குதிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

English summary
Smacking the water with a deafening slap, this is the heart-skipping moment a daredevil leaps off a 89ft crane for a colossal bellyflop to promote a water sports festival in Moss, Norway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X