For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க போண்டா சாப்பிட்டுக்கிட்டே அதை இப்ப செல்பி எடுக்கலாம் பாஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இது செல்பி வெறியர்களுக்கான செய்தி. செல்பி எடுப்பதில் விதம் விதமான கலைகளைக் கண்டு கரை கண்ட செல்பி பிரியர்களுக்காக விசேஷமாக செல்பி ஸ்பூனை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த ஸ்பூனானது 30 இன்ச் வரை விரிவடையக் கூடியதாகும். சாப்பிடும்போதே செல்பி எடுக்க இது உதவுமாம். அதாவது நாம் உணவை வாயில் வைப்பதை அதே ஸ்பூனால் படம் எடுக்க முடியும் என்பதுதான் விசேஷமானது.

இதுவும் ஒரு வகையான செல்பி ஸ்டிக்தான். ஆனால் ஸ்பூன் வடிவில் இது இருக்கும்.

செல்பி ஸ்பூன்...

செல்பி ஸ்பூன்...

இந்த ஸ்பூனின் முடிவுப் பகுதியானது குச்சி போல நீளக் கூடியது. 30 இன்ச் வரை இது நீளும், அதாவது 76.2 சென்டிமீட்டர் வரை நீளுமாம். எனவே ஸ்பூனில் உணவை எடுத்து வையில் வைப்பது போல நமக்கு நாமே எளிதாக படம் எடுக்க முடியும்.

சாப்டுகிட்டே செல்பி...

சாப்டுகிட்டே செல்பி...

ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் சின்னமான் டோஸ்ட் கிரன்ச் இதை உருவாக்கியுள்ளது. சாப்பிடும்போது தத்ரூபமாக செல்பி எடுக்க தற்போது வழி இல்லாமல் உள்ளது. தற்போது அந்தக் குறையை இந்த ஸ்பூன் வந்து தீர்த்து வைக்கப் போகிறது.

ப்ளூடூத்...

ப்ளூடூத்...

இந்த ஸ்பூனை பயன்படுத்துவதற்கு நமது ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத்தை ஆன் செய்தால் போதும். தானாக இந்த ஸ்பூன் நீண்டு நம் விருப்பபடி நாம் சாப்பிடுவதை படம் எடுத்துத் தள்ளும்.

இணையத்தில் ஆர்டர்...

இணையத்தில் ஆர்டர்...

இந்த ஸ்பூன்களை நாம் ஆர்டர் செய்து பெறலாம். இதற்காக ஒரு இணையதளத்தையும் (SelfieSpoon.com) திறந்துள்ளனர். அதில் போய் ஆர்டர் செய்தால் போதும். அனுப்பி வைப்பதற்கான காசையும் நாம்தான் தர வேண்டுமாம்.

அடுத்து செல்பி வாளி, செல்பி மக், செல்பி டம்பளர், செல்பி அண்டா, செல்பி குண்டா என்றெல்லாம் களத்தில் இறக்குவார்கள் போல.

English summary
A 'selfie spoon' that extends up to 30 inches can make meals more fun by allowing you to take photos of yourself while you eat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X