For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடாவில் நடைபெற்ற ஜி 8, ஜி 20 மாநாடுகளை உளவு பார்த்தது அமெரிக்கா!

By Mathi
Google Oneindia Tamil News

USA Flag
டொரண்டோ: கனடாவில் நடைபெற்ற ஜி8 மற்றும் 20 மாநாடுகளை அமெரிக்கா முழுமையாக உளவு பார்த்ததாகவும் இதற்கு கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உடந்தையாக இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென்னை மேற்கோள் காட்டி கனடா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம்:

கனடாவின் டொரான்டோ நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அவர்களின் தொலைபேசி உரையாடல்களை அமெரிக்கா ஒட்டுக் கேட்டுள்ளது. இதற்கு கனடா அரசின் உளவு அமைப்பான கனடா தொலைத்தொடர்பு பாதுகாப்பு நிறுவனமும் முழுஒத்துழைப்பு அளித்துள்ளது.

இதேபோல் கனடாவின் ஹன்ட்வில்லே நகரில் 2010-ம் ஆண்டு ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் ஜி-8 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டையும் அமெரிக்கா அமைப்பு உளவு பார்த்துள்ளது. இவ்வாறு அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜி-20, ஜி-8 மாநாடுகளில் பங்கேற்ற உலகத் தலைவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பக் கூடும் என தெரிகிறது.

English summary
The US National Security Agency conducted widespread surveillance during the 2010 G8 and G20 summits with the blessing of host country Canada’s government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X