For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை 5 நிமிடத்தில் தாக்க முடியுமாம்... மிரட்டுகிறார் பாக். அணு விஞ்ஞானி

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: டெல்லியை 5 நிமிடங்களில் தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்த நாட்டு அணு விஞ்ஞானி அப்துல் காதர் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் அணுசக்தி துறை தந்தையான ஏ.கியூ.கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:

Nuclear-armed Pakistan can 'target' Delhi in 5 minutes: Abdul Qadeer Khan

1998-ல் முதல் அணு குண்டு சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. அதற்கு முன்பு 1984-ம் ஆண்டிலேயே அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டோம். ஆனால் சர்வதேச பொருளாதார தடை அச்சத்தால் அன்றைய ராணுவ தளபதி ஜியா உல் ஹக் திட்டத்தை தடுத்துவிட்டார்.

ராவல் பிண்டி அருகேயுள்ள கதுவா தளத்தில் இருந்து 5 நிமிடங்களில் ஏவுகணை மூலம் டெல்லியை தாக்கும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது.

இவ்வாறு கான் பேசினார்.

இவர் குறிப்பிடும் கதுவா நகரில் யுரேனியத்தை செறிவூட்டும் ஆராய்ச்சி மையம் உள்ளது. அங்குதான் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nuclear-armed Pakistan has the ability to target the Indian capital Delhi in five minutes, the father of Pakistan's nuclear programme Dr Abdul Qadeer Khan has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X