For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு கடிவாளம் போடும் நியூக்ளியர் திட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்) : அதிபர் ஒபாமா பதவியேற்ற 2009 ம் ஆண்டு முதல் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியினர் பல்வேறு குடைச்சல்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.

ஒபாமா பரிந்துரைக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் நியமனத்தை 'பிலபஸ்டர்' முறையில் செனட் சபையில் முறியடித்து வருகிறார்கள்.

செனட் சபையில் 60 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான், ஒபாமாவின் நியமனங்கள் அமலுக்கு வரும்.

அதிபரின் நியமனங்களுக்கு செனட் அங்கீகரிப்பு

அதிபரின் நியமனங்களுக்கு செனட் அங்கீகரிப்பு

சுமார் 80க்கு மேலான நியமனங்கள் ஒபாமாவின் ஆட்சியில், குடியரசுக் கட்சியினரால் முறியடிக்கப்பட்டுள்ளன. குடியரசுக் கட்சியை சார்ந்த சக் ஹேகலை ராணுவ அமைச்சராக நியமித்த போது கூட குடியரசுக் கட்சியினர் கடுமையான நெருக்கடியை கொடுத்தனர்.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதத்தில் செனட் சபைத் தலைவர் ஹாரி ரீட் ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். இது நியூக்ளியர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது அதிபர் நியமனத்தை அங்கீகரிப்பதற்கு செனட் சபையின் மெஜாரிட்டி எண்ணிக்கை போதுமானது. 60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை இல்லை என்பதாகும்.

இதன் மூலம் 55 உறுப்பினர்கள் கொண்ட ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் அதிபர் ஒபாமாவின் நியமனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜனநாயகத்திற்கு எதிரானது

ஜனநாயகத்திற்கு எதிரானது

குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரும், அதிபர் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றவருமான ஜான் மெக்கெய்ன், செனட் சபையின் இந்த தீர்மானம் ஜன நாயகத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமானது என்று கூறியுள்ளார்.

அவரது கட்சியின் செனட் சபை தலைவர் மிச் மெக்னாலும் கடுமையாக சாடியுள்ளார். ஆனால் இதே மிச் மெக்னால் 2005 ஆம் ஆண்டில் நியூக்ளியர் திட்டத்தை முன்மொழிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சி ரீதியாக பிளவு

கட்சி ரீதியாக பிளவு

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க பாராளுமன்ற சபை உறுப்பினர்கள் கட்சி வாரியாக பிளவுபட்டு கிடக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருவதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மரபாக இருந்து வந்தது.

சமீபத்தில் அரசியல்வாதிகளின் வீண் பிடிவாதத்தால் அரசாங்கமே முடங்கிப்போனது முதல், சர்வதேச அளவில் அமெரிக்கா பலவீனப்பட்டு போகும் என பல்வேறு தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு ஹிலரி வேண்டுகோள்

வாக்காளர்களுக்கு ஹிலரி வேண்டுகோள்

பிலடெல்பியாவில் கூட்டம் ஒன்றில் பேசிய ஹிலரி க்ளிண்டன், எந்த கட்சியினருக்கு வேண்டுமானலும் வாக்களியுங்கள் ஆனால் விட்டுக்கொடுத்து அமெரிக்க நன்மைக்காக செயல்படுபவரா என்று மட்டும் பாருங்கள். வீண் பிடிவாதமும் வரட்டு கவுரவுமும் பார்ப்பவர்களை தயவு செய்து தேர்தெடுக்காதீர்கள் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் கொடுத்தார்.

சவால்கள்

சவால்கள்

அதிபர் ரொனால்டு ரீகன் ஆட்சியில் பெரும்பான்மையினராக ஜன நாயகக் கட்சியினர் எவ்வாறு அதிபருடன் இணைந்து செயலபட்டார்கள் என்பதையும் நினைவு படுத்தினார். அடுத்த அதிபர் தேர்தலைக் குறி வைக்கும் ஹிலரியை, ஒபாமா சந்தித்து வரும் சவால்கள் சிந்திக்க வைத்து விட்டதுபோலும்.

English summary
When Senate Democrats invoked the “nuclear option” last week, they immediately did one thing: made this president - and future ones - much more powerful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X