• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிலநடுக்கத்துக்கே அஞ்சாத ஜெசிந்தா எங்கே.. டம்முன்னு கேட்ட சத்தத்துக்கு ஆடிப் போன டிரம்ப் எங்கே!

|

வெல்லிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக அளவில் அதிகம் பேரை ஈர்த்துள்ள தலைவர்களில் ஒருவராக நாளுக்கு நாள் மிளிர்ந்து கொண்டுள்ளார். எப்படி கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோல கலக்கி வரும் பெண் தலைவர் ஜெசிந்தா.

கொஞ்சம் கூட பிரதமர் என்ற பந்தாவை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர். கொரோனாவைரஸ் பரவல் தடுப்பில் நியூசிலாந்து நாட்டை மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ரொம்ப எளிமையானவர், ஆடம்பரமாக இருக்கத் தெரியாதவர். மக்கள் நலனில் அதிக அக்கறையும், உண்மையான உழைப்பையும் கொண்டிருப்பவர்.

சமீபத்தில் கூட ஒரு ஹோட்டலுக்கு தனது காதலருடன் போயிருந்தபோது உட்கார இடம் கிடைக்காமல் வெளியில் நிறுத்தப்பட்டார். அப்படியும் மனம் கோணாமல், தாம் தூம் என்று குதிக்காமல் சிறிது நேரம் காத்திருந்த இடம் கிடைத்த பிறகு போய் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பில்லையும் கட்டி விட்டு கிளம்பிச் சென்றவர்.

இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்! இப்படியே போனால் சிக்கல்தான்.. கொரோனாவுக்கு எதிராக.. 3 முக்கிய வியூகங்களை மாற்றியாகனும்!

 மக்கள் மனதில் ஜெசிந்தா

மக்கள் மனதில் ஜெசிந்தா

இந்த நிலையில் இன்னொரு சம்பவத்தின் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளார் ஜெசிந்தா. திங்கள் கிழமை காலை.. ஒரு தொலைக்காட்சியில் கொரோனாவைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த நேரலை நிகழ்ச்சியில் ஜெசிந்தா கலந்து கொண்டார். செய்தியாளர் அவரிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கமா ஸோ வாட்!

நிலநடுக்கத்தை உணர்ந்த ஜெசிந்தா முகத்தில் கொஞ்சம் கூட பயம் இல்லை.. மாறாக தனது வழக்கமான புன்னகையுடன் தன்னை பேட்டிக் கண்டு கொண்டிருந்த நிருபரிடம், ரியான் இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லேசான நடுக்கம் தெரிகிறது. பரவாயில்லை. பிரச்சினை இல்லை.. லேசான நடுக்கம்தான் என்று சிரித்தபடி படு இயல்பாக கூறுகிறார் ஜெசிந்தா.

 படு கூல்

படு கூல்

அய்யய்யோ நிலநடுக்கம் வந்திருச்சு என்று அவர் பயந்து ஓடவில்லை. மாறாக படு கூலாக அதை எதிர்கொள்கிறார். தனது பேட்டியையும் அவர் தொடர்கிறார். மைக்கைப் பிடுங்கிப் போட்டு விட்டு ஓடவும் எத்தனிக்கவில்லை. மாறாக அதை இயல்பாக எதிர்கொண்டு அனைவரையும் கவர்ந்து விட்டார். ஜெசிந்தா ஏற்கனவே நியூசிலாந்தின் சிறந்த பிரதமராக உருவெடுத்துள்ளார்.

ஆடிப் போன டிரம்ப்

ஜெசிந்தாவின் இந்த தைரியமான சமாளிப்பைப் பார்த்தபோது நமக்கு டொனால்ட் டிரம்ப் நினைவுக்கு வந்தார்.. ஆமா.. அமெரிக்க அதிபர் டிம்ப்தான். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிக் கொண்டிருந்த டிரம்ப்.. திடீரென கேட்ட சத்தத்தால் பயந்து போய் அப்படியே ஷாக் ஆகி நின்றார். பிறகுதான் தெரிந்தது கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் மேடை மீது ஏற முயன்றதால் ஏற்பட்ட குழப்பம் அது என்பது. அவருடன் ஒப்பிடுகையில் நிலமே நடுங்கினாலும் நிலை குலையாத ஜெசிந்தா ஆச்சரியம்தான்.

 சூப்பர் பிரபலம்

சூப்பர் பிரபலம்

கொரோனா தடுப்புப் பணிகள் மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகளிலும் மக்களை அதிகம் கவர்ந்துள்ளார். உலக அளவில் அதிகம் பேரால் விரும்பப்படும் அருமையான தலைவராகவும் ஜெசிந்தா உருவெடுத்துள்ளார். ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர் ஸ்டெடியாக இருக்கிறார் என்பதேயே இந்த தைரியமான அணுகுமுறை வெளிக்காட்டுவதாக பலரும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

English summary
New Zealand Prime Minister Jacinda Ardern very bravely faced the earthquake shake during a live television interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X