For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்ஃபி ஸ்டிக்குடன் ஒபாமா.. அமெரிக்காவில் வைரலாகும் வீடியோ!

By Shankar
Google Oneindia Tamil News

வாசிங்டன்(யு.எஸ்): ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்ஃபி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துக்கொள்ளும் அதிபர் ஒபாமாவின் வீடியோ அமெரிக்காவில் பரபரப்பாக வலம் வருகிறது.

உலகிலேயே சமூகத் தளங்களை அரசியல் பிரச்சாரத்திற்கு அதிகளவில் பயன்படுத்தி வெற்றிகண்ட முதல் அரசியல் தலைவர் ஒபாமாதான்.

ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என அனைத்து சமூக ஊடகங்களிலும் அவர் ஒரு தனிக்காட்டு ராஜாதான். மக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள இவற்றை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி வருகிறார். ஒபாமாவைப் பின்பற்றித் தான் சமூகத்தளங்களில் பிரதமர் மோடியும் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒபாமா கேர் இன்சுரன்ஸ் பதிவு செய்ய கடைசி நாள்

ஒபாமா கேர் இன்சுரன்ஸ் பதிவு செய்ய கடைசி நாள்

அதிபர் ஒபாமாவின் ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாக கருதப்படும் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம், ஒபாமாகேர் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இதில் இணைந்து கொள்ள பிப்ரவரி 15 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இளைஞர்களை இதில் சேர வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செல்ஃபியை கையிலெடுத்த ஒபாமா

செல்ஃபியை கையிலெடுத்த ஒபாமா

இளைஞர்களை கவர்வதற்காக ‘எல்லோரும் செய்வது தான் ஆனால் ஒத்துக் கொள்வதில்லை' என்ற கருத்தில், சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்ஃபி எடுக்கவும் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படியே ஒபாமாவும் செய்து அதை வீடியோவாக ஃபேஸ்புக் மற்றும் யூடியுபில் வெளியிட்டுள்ளார்கள். வியாழக்கிழமை வெளியான இந்த வீடியோவை ஒரே நாளில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

வாழ்க்கை ஒன்றே ஒன்றுதான்

வாழ்க்கை ஒன்றே ஒன்றுதான்

அந்த வீடியோவில் ஏவியேட்டர் கூலிங்க்ளாஸுடன் வெவ்வேறு வித முகபாவனைகளைக் காட்டும் ஒபாமா, செல்ஃபி ஸ்டிக்குடன் தன்னைத் தானே படம் எடுக்கிறார். மிசல் ஒபாமாவை பென்சில் ட்ராயிங்கில் வரைந்து தனக்குத்தானே ‘ நன்றாக இருக்கிறது' என்று சொல்கிறார். ஒபாமா கேர் திட்டத்திற்கு பதிவு செய்ய இறுதி நாளை நினைவு படுத்துவதற்கான ஒத்திகை பார்ப்பது போல் ‘ பிப்ரவரி' என்பதை திணறித் திணறி சொல்லிப் பார்க்கிறார். கடைசியில் அவரது உதவியாளர் இவருடைய கூடைப்பந்து போஸை பார்த்து வியப்பாக சொல்லும் போது ‘என்னையும் என் வாழ்கையை வாழ விடுங்களேன்' என்று கூறுகிறார். அல்டிமேட்டாக ‘ YOLO' என்று அதாவது you only live once என்று கூறி முடிக்கிறார்.

எதிர்க் கட்சியினர் எரிச்சல்

எதிர்க் கட்சியினர் எரிச்சல்

ஒபாமா எதிர்ப்பார்த்தது போல் இளைஞர்களை இந்த செய்தி விரைவாக சென்றடைந்த போதிலும், அதிபர் பதவிக்கான மரியாதையை ஒபாமா கெடுத்துவிட்டார் என்று குடியரசுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாமனிய மக்களோ, அட ஒபாமா வீட்டு கண்ணாடியும் அழுக்காகத்தான் இருக்கு, நம்மளைப் போல் தான் ஒபாமாவுமா என்று சக மனிதரைப்போல் பார்த்து புகழ்ந்துள்ளனர்.

வருங்கால அதிபர்கள் வழக்கமான மீடியாவைகளை தவிர்த்து இப்படிப்பட்ட சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று சமீபத்தில் தான் ஒபாமா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அவர் சொன்னது சரியானதுதான் என்பதை இந்த ஒன்றரை நிமிட வீடியோவின் வெற்றியே சொல்லிவிட்டது!

English summary
Is it un-presidential to pose with a selfie stick? To pretend to shoot hoops all alone in the White House? To make fun of yourself on the internet? To say “Yolo”? Barack Obama has launched those important national questions with a game appearance in an unusual video produced to drive subscriptions in healthcare plans before the end of an open enrollment period on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X