For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்கோ ஹரம் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா உதவும் – ஒபாமா அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமா நேற்று நைஜீரிய தீவிரவாதிகளுக்கு எதிராக உலக அளாவிய நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார்.

மேலும், வாஷிங்டன் ராணுவப் படைகளையும் அனுப்பி உள்ளது என்று கூறியுள்ளார்.

அதன்மூலம், தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 200 மாணவிகளையும் காப்பாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவம்:

அமெரிக்க ராணுவம்:

இதை உறுதி செய்துள்ள ஒபாமா நைஜீரிய தலைவர்கள் இதனை ஏற்றுக் கொண்டதாகவும், ஏற்கனவே நைஜீரியாவிற்கு ராணுவப் படைகளை அனுப்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முடிவு வேண்டும்:

முடிவு வேண்டும்:

"இது ஒரு நெஞ்சை உருக்கும் நிலை" என்று ஒபாமா அமெரிக்க பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளார்."ஆனால், இந்த வெறிச்செயலின் மூலம் அனைத்து நாடுகளின் ஒற்றுமையும் வெளிப்படும்.மேலும், இந்த மோசமான குற்றங்களுக்கு முடிவு கட்டியாக வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 8 பேர்:

மேலும் 8 பேர்:

இந்நிலையில் மேலும் 8 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும், கடத்தப்பட்ட முதல் 200 மாணவிகளை விபச்சாரச் சந்தையில் விற்றுவிடுவோம் என்று போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழு:

மீட்புக் குழு:

அமெரிக்க ராணுவக் குழுவானது மாணவிகளை எங்கு கடத்தி வைத்துள்ளனர் என்று ஆராய்ந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் தகவல்:

அதிகாரிகள் தகவல்:

அமெரிக்க அதிகாரிகள் கடத்தப்பட்ட மாணவிகள் பற்றிய பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.அவர்களில் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பக்கத்து நாடுகளுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

என் மகள் நிலை?:

என் மகள் நிலை?:

வாஷிங்டன் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது.இதில் ராணுவத்தினர், சட்ட ஆலோசகர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடத்தப்பட்ட பெண்களில் ஒரு மாணவியின் தந்தை, "என்னால் என் மகளின் நிலையை நினைத்து கூட பார்க்க இயலவில்லை" என்று கூறியுள்ளார்.

எதிர்காலம் என்னவாகும்? :

எதிர்காலம் என்னவாகும்? :

"இதுதான் நாட்டின் இப்போதைய நிலை.அவர்கள் அனைவரும் எதிர்கால ஆசிரியர்கள், நடனமணிகள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், அன்பான அம்மாக்கள், நாட்டின் பெண்மணிகள்" என்று கூறியுள்ளார் அஸ்தான் என்னும் பெண்மணி.

மாணவிகளைத் திருப்பித் தாருங்கள்:

மாணவிகளைத் திருப்பித் தாருங்கள்:

இந்த செயலுக்காக போராட்டம் நடத்தி வரும் அமைப்பினர் "மாணவிகளை திருப்பித் தாருங்கள்" என்ற வாசகங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Barack Obamaon Tuesday urged global action against Nigerian Islamic militants, as Washington sent in military experts to help track down more than 200 girls seized in a "heartbreaking" kidnapping.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X