For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து அளித்த ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் புனித ரமலானை முன்னிட்டு இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

புனித ரமலான் மாதம் துவங்கியதையடுத்து உலக முஸ்லீ்ம்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் முஸ்லீம்களுக்கு இப்தார் விருது அளித்தார். வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் நடந்த இப்தார் விருந்தில் பலர் கலந்து கொண்டனர்.

Obama hosts annual Iftar at White House

என்ன மதமாக இருந்தாலும், நாம் எல்லாம் ஒரே குடும்பம் தான் என ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா அளித்த விருந்தில் முஸ்லீம் என்பதால் தலையில் ஸ்கார்ப் அணிந்த காரணத்திற்காக ஓக்லஹாமாவில் உள்ள ஆபர்க்ரோம்பி கடையில் வேலை மறுக்கப்பட்ட சமந்தா இலாப் கலந்து கொண்டார்.

பிப்ரவரி மாதம் வடக்கு கரோலினாவில் கொல்லப்பட்ட 3 முஸ்லீம்கள் பற்றியும், தெற்கு கரோலினாவில் உள்ள பிரபல தேவாலயத்தில் 9 கருப்பினத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்தும் ஒபாமா இப்தார் விருந்தில் பேசினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாரையும் மதம், இனம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தாக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

English summary
US president Obama has hosted annual iftar party at the east room in the White house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X