For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான்கு மாத ஒய்வுக்குப் பின் மீண்டும் மக்கள் பணியில் ஒபாமா... பட் நோ பாலிடிக்ஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

சிகாகோ(யு.எஸ்): அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நான்கு மாத ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புகிறார்.

தீவிர அரசியல் இல்லாமல் சமுதாய மாற்றத்திற்கான புதிய களத்தில் ஒபாமா பணியாற்றுவார் என்று அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Obama is returning to public life

முதல் நிகழ்ச்சியாக சிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் வருகிற திங்கட்கிழமை உரையாற்றுகிறார். 'சமுதாய ஒருங்கிணைப்பும் சமூகப் பணிகளும்' என்ற தலைப்பில் ஒபாமா பேச உள்ளார்.

அதைத் தொடர்ந்து பாஸ்டனில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இன்னும் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பேச உள்ளார்.

ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் ஒபாமா , ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கெலுடன் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஒபாமா அரசியல் பேசப் போவதில்லை என தெரிகிறது. அவரது ஆதரவாளர்கள், அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஒபாமா குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் ஒபாமா, ஒரு நேரத்தில் ஒரு அதிபர் தான் இருக்க முடியும். அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்ய விரும்பவில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.

ஆனாலும் ஜனநாயகக் கட்சி வளர்ச்சிக்காக தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அரசியல் தொடர்பான பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த தலைமுறை இளைய தலைவர்களை உருவாக்கவும், மனித உரிமைகளுக்காவும் செயல்படுவார் என்று ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்யாமல், அடிப்படை மாற்றத்திற்கான வழிகளை நோக்கி தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள ஒபாமா விரும்புகிறார்.

பொது மேடைகளிலோ அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ அதிபர் ட்ரம்பை விமர்சித்து ஒபாமா பேச மாட்டார் என அவருடைய நெருக்கமான நட்பு வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்

சுயசரிதை எழுதும் ஒபாமா தம்பதியினர்

கடந்த நான்கு மாதங்களாக கரிபியின் தீவுகளில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வந்த ஒபாமா , கால்ஃப் ஆடியும் கடற்கரையில் ஓய்வெடுத்தும் களித்துள்ளனர்.

தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கும் ஒபாமாவும் மிஷல் ஒபாமாவும் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். பெங்குயின் பதிப்பகத்தாரிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதற்கு குறிப்ப்ட தொகை வழங்கப்படும்.

பில் க்ளிண்டன் ஒரு நிகழ்ச்சிக்கு 200 ஆயிரம் டாலர்கள் வரை வாங்கி இருந்தார். ஜார்ஜ் டபுள்யூ புஷ்க்கு 100 ஆயிரம் முதல் 175 ஆயிரம் டாலர்கள் வரை ஒரு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.

ஒபாமாவுக்கு பில் க்ளிண்டனை விடவும் அதிகம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. பில் க்ளிண்டன் போலவே ஒபாமா அறக்கட்டளையும் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இளைய மகள் சாஷா பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையிலும் தலை நகர் வாஷிங்டனில் தங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு சிகாகோவில் குடிபெயர்வார்கள் என தெரிகிறது.

- இர தினகர

English summary
Former US President Barak Obama is coming back to public life after 4 months of vacation. His first public speech is scheduled on this Monday at University of Chicago , followed by award ceremony in Boston. He is also scheduled to participate few private events before leaving to Germany for a joint appearance with Chancellor Angela Merkel. Obama is not expected to make any political statements against Trump and expected to focus on social activities.  
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X