என்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் புதிய வரைபடம் ஒன்று மியூசியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஸ்மித் சோனியான் தேசிய வரைபட மியூசியத்தில் இந்தப் படம் வைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் அவரது மனைவி மிட்சல் ஒபாமா புகைப்படமும் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒபாமாவும், மிட்சல் ஒபாமாவும் சேர்ந்து இந்தப் புகைப்படத்தை திறந்தார்கள்.

தற்போது இந்த புகைப்படத்தின் வித்தியாசமான தன்மைக்காக அது மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இதை வைத்து மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மியூசியம்

மியூசியம்

ஸ்மித் சோனியான் தேசிய வரைபட மியூசியம் அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு முன்னாள் அதிபர்களின் வரைபடங்கள் எல்லாம் இருக்கிறது. அதேபோல் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரைபடமும் இடம்பெற்று உள்ளது .

திறந்தனர்

இதில் வைக்கப்பட்டு இருக்கும் ஒபாமா வரைபடம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் எப்போதும் இருப்பது போல இல்லாமல் இதில் சட்டை பட்டனை திறந்து வைத்து ஸ்டைலாக அமர்ந்துள்ளார். மேலும் அவர் செடிகளுக்குள் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது.

மிட்சல் வரைபடம்

மிட்சல் வரைபடம்

அதேபோல் அருகிலேயே மிட்சல் படமும் திறக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமாகப் பட போஸ்டர் போலக் கலர் கலராக இருக்கிறது. கெஹிண்டே வில்லே என்பவர் இந்தப் படங்களை வரைந்து இருக்கிறார்.

டிரெண்ட்

இந்தப் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. பலரும் இதை டிரம்ப்புடன் சேர்த்து வைத்துக் கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள். இவர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வெளியே இருப்பது போல எடிட் செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Obama and Michelle's portrait becomes viral in social media. This portrait has drawn by Kehinde Wiley. They show cased in Smithsonian National Portrait Gallery in Washington.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற