For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா போட்ட ஒரு ட்வீட்... பல லட்சம் லைக்ஸ் - சமூக வலைதளத்தில் புதிய சாதனை

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பதிவிட்ட ஒரு ட்வீட் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளது. பல லட்சம் பேரால் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன் : மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பதிவிட்ட ட்வீட் பல லட்சம் பேரின் மனதை கவர்ந்துள்ளது.

ஒபாமா தொடங்கி மோடி வரை ட்விட்டரில் தினசரி தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல லட்சக்கணக்கானோர் தலைவர்களை பின் தொடர்வதால் அவர்களின் கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடைகின்றன.

அப்படித்தான் கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பதிவிட்ட ஒரு ட்வீட், சமூக வலைதளத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

Obama’s Charlottesville Response Becomes Most-Liked Tweet Ever

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் இருதரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வேதனையோடு பதிவிட்ட ஒரு ட்வீட்டிற்கு 3,963,862 பேர் லைக் போட்டுள்ளனர்.1,512,957 பேர் அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப் போரில் பங்கேற்ற படை தளபதி ராபர்ட் எட்வர்டு லீயின் உருவச் சிலையை அகற்ற வெர்ஜினியா அரசு முடிவு செய்ததையடுத்து குறிப்பிட்ட வெள்ளை இன மக்கள் சார்லோட்டஸ்வில்லே நகரில் இனவெறிக்கு எதிராக பேரணி நடத்தினர்.

Recommended Video

    Obama's anti-racism tweet gets more than 3 million likes on social media | Oneindia News

    அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று, பேரணியாக சென்றவர்கள் மீது மோதியது இதில் பெண் ஒருவர் பலியானார். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனையடுத்து வெர்ஜினியாவிலுள்ள வெள்ளை இனத்தவரின் இருதரப்புக்குகிடையே வன்முறை ஏற்பட்டது.

    வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து வெர்ஜினியா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சனை தீவிரமாகாமல் தடுப்பதற்காக சார்லொட்டஸ்வில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இன துவேஷங்களை புறம்தள்ளி அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நடந்த சம்பவத்துக்கு இருதரப்பினருமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சார்லொட்டஸ்வில்லி கலவரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து கடந்த சனிக்கிழமையன்று ட்விட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

    மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ஒபாமா.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பதிவிட்ட இந்த ட்வீட் பல லட்சம் பேரின் மனதை கவர்ந்துள்ளது. ஒபாமாவின் ட்விட்டிற்கு இதுவரை 3,963,862 பேர் லைக் போட்டுள்ளனர்.1,512,957 பேர் அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ளனர்.

    English summary
    Barack Obama’s response to the violence in Charlottesville, Va., became the most-liked tweet in Twitter’s history .No one is born hating another person because of the color of his skin or his background or his religion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X