For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் கணவன்-மனைவி அந்தஸ்து! பட்ஜெட்டில் ஒபாமா அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஒரினச்சேர்க்கையாளர்களும் அரசு சலுகைகளை பெற முடியும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை, 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஒபாமா தாக்கல் செய்துள்ளார். அதில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் கவனம் ஈர்க்கின்றன.

ஓரினச் சேர்க்கைக்கு ஒபாமா ஆதரவு

ஓரினச் சேர்க்கைக்கு ஒபாமா ஆதரவு

அமெரிக்காவில் மேரிலேண்ட் உள்ளிட்ட 36 மாகாணங்களில்தான் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி உள்ளது. எனவே, பிற பகுதிகளில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அரசு சலுகைகள் கிடைக்காது. ஆனால் ஒபாமாவோ, அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களிலும் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி கிடைக்கும் வகையில் சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி வந்தார்.

அரசியல் சாசனம் சொல்கிறதே..

அரசியல் சாசனம் சொல்கிறதே..

அமெரிக்க அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள சரிசமமான பாதுகாப்பு என்ற வார்த்தையில், ஓரினச் சேர்க்கையாளர்களும் உள்ளடங்கிவிடுவர் என்பது ஒபாமா கருத்தாக உள்ளது.

சலுகைகள்

சலுகைகள்

இந்நிலையில்தான், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க சரிசம உரிமை இருக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் ஒபாமா.

குடியரசு கட்சி குடைச்சல்

குடியரசு கட்சி குடைச்சல்

ஆனால் இநத் பட்ஜெட்டை குடியரசு கட்சியினர் ஆதிக்கம் அதிகமுள்ள காங்கிரஸ் சபை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த கட்சியினரோ, ஓரினச் சேர்க்கையாளர்கள் விவகாரத்தில் ஒருமித்த கருத்தில்லாமல் உள்ளனர்.

அமெரிக்கர்கள் மனநிலை மாறியுள்ளது

அமெரிக்கர்கள் மனநிலை மாறியுள்ளது

ஓரினச்சேர்க்கை குறித்த அமெரிக்கர்கள் கருத்தோட்டம் மாறிவருகிறது. கடந்த 2004ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 31 சதவீத அமெரிக்கர்கள், ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு அளித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆதரவாளர்கள் எண்ணிக்கை 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.

English summary
President Barack Obama’s $4 trillion budget proposal includes a major change to the Social Security Act that would allow same-sex couples to receive spousal benefits even if they live in states that don’t recognize such unions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X