For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகப் போரைவிடக் கொடுமையான உடல் பருமன் – ஆண்டுக்கு 1.24 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் உடல் பருமன் உடையவர்களால் ஆண்டுக்கு ரூபாய் 1.24 லட்சம் கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாக லண்டன் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.

லண்டனில் உள்ள மெக்கன்சி குளோபல் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் சமீபத்தில் உடல் பருமன் உள்ளவர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது.

Obesity costs the global economy as much as war and terrorism, totaling $2 TRILLION each year

அதில் உலக மக்கள் தொகையில் 210 கோடி பேர் அதாவது 30 சதவீதம் மக்கள் உடல் பருமன் மற்றும் அதிக எடையால் அவதிப்படுகிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.

இது பசி பட்டினியால் வாடும் பெரியவர்கள், குழந்தைகள் எண்ணிக்கையை விட 2.15 பங்கு அதிகம் என்று கூறியுள்ளது. உலக அளவில் நடக்கும் மரண சம்பவங்களில் 5 சதவீதம் உடல் பருமன் நோயால் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இது வளர்ந்து கொண்டே சென்றால் 203 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர் உடல் பருமன் நோய்க்கு அவதிப்படுவார்கள் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. உடல் பருமனால் உலக பொருளாதாரத்தில் 1.24 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

உடல் பருமனில் இருந்து விடுபட அரசாங்கத்துடன் வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள், ஓட்டல் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அந்த நிறுவனம் யோசனை கூறியுள்ளது.

English summary
Obesity places as great a burden on the global economy as war and terrorism, costing $2 trillion each year. A rising tide of obesity is 'a critical global issue' that requires a 'comprehensive, international intervention strategy', researchers have claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X