For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒத்துழையாமை இயக்கத்தினருக்கு சிறை.. 2014-ஐ போலவே ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் வெடிக்கும் சூழல்

Google Oneindia Tamil News

ஹாங்காங் நாட்டில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்த, முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ஹாங்காங் நாட்டில் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது ஒத்துழையாமை இயக்கத்தினரின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த 2014-ல் அம்பர்லா இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Occupy leaders jailed for 2014 democracy protests.. protest erupted in Hong Kong

இதனை முன்னெடுத்த சான் கின்-மேன் மற்றும் பென்னி தாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 4 பேருக்கு, ஹாங்காங் உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் மத்தியில் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான லீ விங் டாட் உரையாற்றினார்.

செவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்ட பகீர் கிளப்பும் நாசா! செவ்வாய் கிரகத்திலும் முதல் முறையாக நில அதிர்வு.. ஆடியோ வெளியிட்ட பகீர் கிளப்பும் நாசா!

அப்போது பேசிய அவர் இந்த கூட்டத்தை பார்க்கும் போது நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. ஜனநாயகத்திற்கான போராட்டங்களை ஹாங்காங் மக்கள் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. நான் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தை காண போகிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

ஜனநாயக ஆதரவு போராட்ட தலைவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கின் பல இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பதாகைகளை ஏந்தியும், மெழுகுவர்த்திகளை கையில் பிடித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் குதித்தனர்.

ஹாங்காங் நாட்டில் வெடித்துள்ள இந்த போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 2014-ல் நடத்தப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். 3 மாதங்கள் ஹாங்காங்கையே உலுக்கிய இந்த போராட்டத்தை போல, மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
protests have erupted in Hong Kong, where the major anti-corruption movement was launched in 2014 and condemned 4 leaders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X