For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தக் காலத்து "தாத்தா நட்சத்திரங்கள்" கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

நாசா: இதுவரை விஞ்ஞானிகள் கண்டிராத மிக மிக பழமையான நட்சத்திரங்களை நமது பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

நமது பால்வெளி மண்டலம் உருவாதற்கு முன்பே உருவான நட்சத்திரங்களாக இவை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அண்டவெளி உருவானதாக கருதப்படுகிறது. அதற்கும் முந்தைய நட்சத்திரங்களாக இவை கருதப்படுவதால் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மொத்தம் 9 நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மில்க்கி வே எனப்படும் பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதியில் இவை உள்ளன.

தூய்மையாக...

தூய்மையாக...

இந்த நட்சத்திரங்கள் மிகவும் தூய்மையாக உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றில் ஹைப்பர்நோவா என்ற வெடிப்பின் மூலமாக இறந்து போன முந்தைய நட்சத்திரத்தின் துகள்கள் அடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆதி நட்சத்திரங்கள்...

ஆதி நட்சத்திரங்கள்...

நமது அண்டவெளியில் இன்னும் வாழும் ஆதி நட்சத்திரங்கள் இவை. மிக மிக பழமையான நட்சத்திரங்களும் கூட என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் லூயிஸ் ஹோவஸ்.

காலக்ஸி...

காலக்ஸி...

மேலும், மில்க்கி வே உருவாவதற்கு முன்பு இவை பிறந்துள்ளன. இவற்றைச் சுற்றித்தான் காலக்ஸியானது உருவாகியுள்ளது என்றார் ஹோவஸ்.

புதிய கேள்விகள்...

புதிய கேள்விகள்...

நமக்கு முந்தைய அண்டவெளி குறித்த புதிய கேள்விகளையும், ஆர்வத்தையும் இந்த நட்சத்திரக் கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளது. இந்த நட்சத்திரங்களில் கார்பன் மிக மிக குறைவாக உள்ளது. இரும்பும், பிற கனரக மெட்டல்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Astronomers have discovered what they believe to be the oldest stars ever seen, dating from before the Milky Way Galaxy formed, when the universe was just 300 million years old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X