For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமனை வறுமையிலிருந்து மீட்ட.. மன்னர் சுல்தான் காபூஸ்.. 79 வயதில் மரணம்

Google Oneindia Tamil News

மஸ்கட்: ஓமன் நாட்டு அரசர் சுல்தான் காபூஸ் சயீத் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது இறப்பை ஓமன் அரசு உறுதி செய்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் மிக நீண்டகாலமாக ஆட்சி செய்தவர் சுல்தான். அவரது ஆட்சி காலத்தில் ஓமன் நாட்டை வறுமையிலிருந்து மீட்டெடுத்தார். மேலும் அந்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்டினார்.

Oman King Sultan Qaboos died at Royal Palace

எண்ணெய் வளத்தை வைத்து தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று சாலைகள், துறைமுகங்கள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு ஸ்டேடியம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினார்.

இவரது தனது 29 ஆவது வயதில் ஆட்சிக்கு வந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு அடுத்த அரசர் யார் என்பதையும் இவர் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்றைய தினம் காலமானார். இவரது இறப்பை ஓமன் நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் அதற்கான காரணத்தை அறிவிக்கவில்லை. புற்றுநோய்க்காக ஜெர்மனியில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இவரது பிறந்த நாளான நவம்பர் 18-ஆம் தேதி ஓமன் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.

Run Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு!Run Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு!

இவரது தந்தை சயீத் பின் தைமூர் ஆட்சி காலத்தில் இருந்த ஓமனை உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மாற்றியவர் காபூஸ். இவரது தந்தை ஆட்சி காலத்தில் அவரது அனுமதியின்றி சிமெண்ட் வாங்குவதோ மூக்கு கண்ணாடிகளை அணிவதோ கூடாது.

கடந்த 2011 ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி சிறையில் அடைக்கப்பட்ட 3 அமெரிக்கர்களை விடுதலை செய்யுமாறு காபூஸ் கேட்டுக் கொண்டார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வித்திட்டவர். இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லாததால் அடுத்த அரசரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

English summary
Sultan Oaboos bin said of Oman dies at the age of 79 at Royal Palace, Muscat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X