For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனிதாவுக்காக இரங்கிய ஓமன் தமிழர்கள்

Google Oneindia Tamil News

மஸ்கட்: நீட் காவு கொண்ட அனிதாவுக்காக ஓமனில் வசிக்கும் தமிழர்கள் இரங்கல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

மருத்துவக் கனவு நிறைவேறாமல் போன வேதனையில் மரித்துப் போனார் அனிதா. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் உலகெங்கும் அனிதாவுக்காக இரங்கல் நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

Oman Tamils pay Candlelight vigil to Anitha

இந்த நிலையில் ஓமன் நாட்டிலும் தமிழர்கள் திரண்டு அனிதாவுக்காக இரங்கல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். மஸ்கட், காலாவில் இந்த இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Oman Tamils pay Candlelight vigil to Anitha

6ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த இந்த இரங்கல் நிகழ்ச்சியில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டு அனிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Oman Tamils pay Candlelight vigil to Anitha

நீட்தான் அனிதாவைக் கொன்று விட்டது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் தாங்கிப் பிடித்து அவர்கள் நீட்டுக்கும் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

படம்+செய்தி: சரவணன், மஸ்கட்.

English summary
A Mourning was arranged for the student Anitha in Oman by Tamil people residing there on 6th September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X