For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை கோபுர தாக்குதலை டிவியில் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த ஆர்லான்டோ கொலையாளி

By Siva
Google Oneindia Tamil News

ஆர்லான்டோ: 2001ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் விமானத்தை மோதி தகர்த்ததை டிவியில் பார்த்த பள்ளி மாணவன் உமர் மாட்டீன் தீவிரவாதிகளை பாராட்டி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மகாணாத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் செயல்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் புகுந்து 50 பேரை சுட்டுக் கொன்ற உமர் மாட்டீன் பற்றி மேலும் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

பள்ளி காலத்திலேயே உமருக்கு தீவிரவாதம் மீது ஈர்ப்பு இருந்துள்ளது.

இரட்டை கோபுரங்கள்

இரட்டை கோபுரங்கள்

நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களை கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அல் கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்கினர். இந்த சம்பவத்தால் அமெரிக்கா மட்டும் இன்றி உலகமே அதிர்ச்சி அடைந்தது.

உமர்

உமர்

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டபோது உமர் மாட்டீன் மார்ட்டின் கவுன்ட்டி உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தீவிரவாத தாக்குதல் செய்தியை டிவியில் பார்த்த பள்ளி மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இரட்டை கோபுரங்கள் மீது விமானங்கள் மோதியதை டிவியில் பார்த்த உமர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார். மேலும் தாக்குல் நடத்திய தீவிவாதிகளை அவர் பாராட்டித் தள்ளியுள்ளார். இதை அவருடன் படித்த மாணவர் ராபர்ட் ஜிர்கில் தெரிவித்துள்ளார்.

விமானம்

விமானம்

அந்த துயர சம்பவம் நடந்த அன்று பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பேருந்தில் விமானம் போன்று சப்தம் செய்துள்ளார் உமர். 9/11 சம்பவத்திற்கு பிறகு உமர் மாறிவிட்டார். அவனுக்கு பள்ளியில் நண்பர்களே கிடையாது என்கிறார் ராபர்ட்.

English summary
Orlando shooter Omar Mateen jumped out of joy after seeing terrorists attacking twin towers in New York in 2001.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X