For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பிரா'வுக்குள் 200 பாக்கெட் ஹெராயினை மறைத்துக் கடத்தி சிறை சென்று மீண்ட பெண்

Google Oneindia Tamil News

ஸ்டேட்டன் தீவு, நியூயார்க்: அமெரிக்காவில் தனது பிராவுக்குள் 200 குட்டி குட்டி பாக்கெட்களில் ஹெராயினை மறைத்து வைத்துக் கடத்தி போலீஸில் சிக்கி ஒரு வருட சிறைத் தண்டனை அனுபவித்த பெண் இப்போது விடுதலையாகியிருக்கிறார். சட்டரீதியான வாழ்க்கை வாழ ஆசைப்படும் அவர் அனைத்து உறவுகளையும் இழந்து விட்ட நிலையில் பலசரக்குக் கடைகளில் வேலை கோரி ஏறி இறங்கி வருகிறாராம்.

46 வயதானவர் லாரி ஸ்பெர்ரிங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவர் மீதும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

ஸ்பெர்ரிங்கை சோதனையிட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தனது பிராவுக்குள் அவர் 200 பாக்கெட்களில் ஹெராயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததால்.

பிராவுக்குள் ஹெராயின் குவியல்

பிராவுக்குள் ஹெராயின் குவியல்

ஸ்பெர்ரிங்கைக் கைது செய்த போலீஸார், அவரிடம் சோதனை நடத்தினர். பெண் போலீஸார் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவரது பிராவுக்குள் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.

200 பாக்கெட்

200 பாக்கெட்

அவரது பிராவை அகற்றி சோதனையிட்ட போலீஸார் அதற்குள் 200 சின்னச் சின்ன பாக்கெட்களை மிகவும் சாதுரியமாக ஸ்பெர்ரிங் மறைத்து வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போதையில் புரண்ட ஸ்பெர்ரிங்

போதையில் புரண்ட ஸ்பெர்ரிங்

ஸ்பெர்ரிங் தனது கணவரை விவாகரத்து செய்தனர். தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு போலீஸ் அதிகாரியும் உடந்தை. இவர்கள் சேர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். அதில் பெரும் பணம் கிடைக்கவே தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ஸ்பெர்ரிங்.

சிறையில் ஞானோதயம்

சிறையில் ஞானோதயம்

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிக்கி சிறை சென்றார் ஸ்பெர்ரிங். அவரை விட்டு உறவுகள் பிரிந்தனர். இவரைப் போலவே கைதாகி சிறையில் இருந்த டான்யா என்பவருடன் நட்பு கொண்டார். அவர் மட்டுமே தற்போது ஸ்பெர்ரிங்கின் ஒரே தோழி.

பலசரக்குக் கடைகளில் வேலை

பலசரக்குக் கடைகளில் வேலை

தற்போது சிறையிலிருந்து மீண்டு விடுதலையாகியுள்ள ஸ்பெர்ரிங் சாதாரண பிரஜை போல வாழ ஆசைப்படுவதாக கூறியுள்ளார். வேலை செய்து உழைத்து சம்பாதிக்கப் போவதாக கூறுகிறார். தனது ஊரில் உள்ள பல்வேறு சூப்பர் மார்க்கெட்களில் வேலை கோரி விண்ணப்பித்துள்ளாராம்.

English summary
She walked out of Rikers Island and lit a cigarette in the parking lot, joking with the correction officers arriving for work. Look who's out, they said to her. Stay out of trouble, Laurie Sperring. Lauri, 46, was arrested July 1, 2014, after an officer saw her buying 200 small envelopes of heroin down the block from her condominium on suburban Wood Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X