For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லிபியாவில் 2 இந்தியர்கள் கடத்தல்: ஒருவர் தப்பியோட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சிர்தே: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் 2 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அதில் ஒருவர் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரவாஷ் ரஞ்சன் சமல் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ராமமூர்த்தி கோசனம் ஆகியோர் லிபியாவில் உள்ள சிர்தேவில் இருக்கும் இப்ன் இ சினாவில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் இருவரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி கடத்தப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை.

One of 2 Indians abducted in Libya flees from captivity

இந்நிலையில் சமல் தீவிரவாதிகளின் பிடியில் தப்பித்துள்ளார். தான் நலமாக உள்ளதாக அவர் தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். ராமமூர்த்தியை விடுவிக்கும் முயற்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் சிர்தே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 4 ஆசிரியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதில் இருவர் விடுவிக்கப்பட்டனர். மற்ற இருவர் இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் தான் உள்ளனர்.

தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்கள் கம்ப்யூட்டர் சயன்ஸ் துணை பேராசிரியரான டி. கோபாலகிருஷ்ணா மற்றும் ஆங்கில துணை பேராசிரியரான கே. பல்ராம் ஆவர். சிர்தே நகரம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
One of the two Indians, who were abducted in Sirte in war-torn Libya, has managed to flee from captivity. Sources said Pravash Ranjan Samal, hailing from Odisha, escaped from the captors and conveyed to one of his friends that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X