For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக அளவில் வெறும் 25 சதம்தான் டிஜிட்டல் பெண்கள்.. மகளிர் பற்றி என்ன சொல்கிறது ஐ.நா

ஆண்களுக்கும் சேர்த்து 8 மணி நேர வேலை உறுதிப்படுத்தித் தந்த பெண்கள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னை: இன்று உலக மகளிர் தினம். உலக முழுவதும் கொண்டாடும் இந்த தினத்தில்தான் ஆண்களுக்கு

Google Oneindia Tamil News

1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடினர்.

அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு உறுதியோடு போராடி பெற்றுத் தந்த உரிமை தினமான இன்று உலக மகளிர் தினமாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில் பெண்களின் நிலை என்ன என்று பெண்களுக்கான ஐ.நா. அமைப்பின் இயக்குனர் சொல்லியிருப்பதைப் பார்ப்போம்.

ஐ.நா.வின் விருப்பம்

ஐ.நா.வின் விருப்பம்

சிறுமிகளும், தாய்மார்களும் தங்களின் குடும்பங்களை நிர்வகிப்பதற்காக, நிறையத் தியாகங்களை செய்து வருகிறார்கள் என்று கூறும் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பின் இயக்குனர் பும்சில் லாம்போ, பெண்களுக்கென வித்தியாசமான ஒரு தொழில் உலகை உருவாக்க விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.

டிஜிட்டல் பெண்கள்

டிஜிட்டல் பெண்கள்

பெண்களும், சிறுமிகளும், டிஜிட்டல் உலகில், புரட்சியின் ஓர் அங்கமாகச் செயல்பட தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள பும்சில் லாம்போ, பொருளாதார வாழ்வில் பெண்களின் பங்கை ஊக்குவித்தல் அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

2025க்குள் பெண்கள்

2025க்குள் பெண்கள்

எல்லாத் துறைகளிலும், பெண்களின் பங்கேற்பை அதிகரித்தால், 2025ம் ஆண்டுக்குள், உலகளாவிய உற்பத்தி 12 டிரில்லியன் டாலரை எட்டும் என லாம்போ உறுதிபடக் கூறியுள்ளார்.

டிஜிட்டல் பெண்கள்

டிஜிட்டல் பெண்கள்

அதேவேளையில், தற்போது டிஜிட்டல் தொழிற்சாலைகளில், 25 விழுக்காட்டுப் பெண்களே வேலை செய்கின்றனர் என்று தனது கவலையை தெரிவித்துள்ளார். உலகில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள ஊதிய வித்தியாசம் 23 சதவீதமாக தற்போது உள்ளது என்பதை லாம்போ பதிவு செய்துள்ளார்.

English summary
Only 25 percent women in Digital factory, said UNO’s Phumzile Mlambo-Ngcuka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X