For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் திரும்பும் அந்தக்காலம்.. திறந்தவெளிக்கு வரும் பள்ளிகள்.. இதையே எல்லோரும் பண்ணலாமே!

போஸ்னியா நாட்டில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் திறந்தவெளி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சராஜீவோ: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு, போஸ்னியா நாட்டில் திறந்தவெளி வகுப்பறைகள் துவங்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றால் கடந்த 6 மாதங்களாக உலகமே முடங்கிக் கிடக்கிறது. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.

இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பதில், பல நாடுகளில் இன்னமும் சாத்தியமில்லாத சூழல் தான் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார்ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார்

திறந்தவெளி வகுப்பறைகள்

திறந்தவெளி வகுப்பறைகள்

இந்த சூழ்நிலையில் போஸ்னியா நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் திறந்தவெளி வகுப்பறைகள் அமைத்து மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்துள்ளனர். என்னதான் ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தாலும், கொரோனா பிரச்சினையால் மாணவர்களின் பள்ளிப் பருவம் கெட்டு விடக் கூடாது என, அங்குள்ள ககுனி எனும் கிராமத்தில் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து இந்த வகுப்பறையை அமைத்துள்ளனர்.

ஆசிரியர்களின் முயற்சி

ஆசிரியர்களின் முயற்சி

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த காலத்தை பயன்படுத்தி, தாங்களாகவே நிதி திரட்டி இந்த வகுப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். சுமார் 1000 பேர் படிக்கும் அந்தப் பள்ளியில், வெளிப்புறத்தில் மரத்தினால் செய்யப்பட்ட மேஜைகள் செய்யப்பட்டு மாணவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வானிலை தான் பிரச்சினை

வானிலை தான் பிரச்சினை

மேலும் சுவர்களில் கரும் பலகைகள் அமைத்து ஆசிரியர்கள் வகுப்பெடுக்கின்றனர். மாணவர்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியுடன் அமர்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. வானிலை ஒத்துழைக்கும் வரை இந்த வகுப்புகள் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவித அனுபவம்

புதுவித அனுபவம்

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவதால் மாணவர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அதுவும் திறந்தவெளியில் பாடம் கற்பது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தருவதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழல் அவர்களுக்கு மன மகிழ்வை தருகின்றன என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வரவேற்பு

வரவேற்பு

கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் அனைவரும் பழங்கால வாழ்க்கை முறைப்படி இயற்கை திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட இந்த மாறுதல் தற்போது பள்ளிகள் வரை வந்துவிட்டது. இப்படியே போனால் உலகம் முழுவதும் இனி திறந்தவெளி வகுப்புகள் தான் திறக்கப்பட வேண்டிய சூழல் உருவாகும் என்றே தெரிகிறது.

English summary
Teachers at an elementary school in the village of Kacuni in central Bosnia have used their summer holiday to build an open-air classroom outside their school to the joy of their students and local community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X