For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில்... ஆபரேஷன் எம்டி பிளேட்...சிக்கனம் செய்ய அதிபர் புதிய உத்தரவு!!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவின் ஓட்டல்களில் இனி உணவு அருந்தும்போது உணவு வீணாக்குவதை தவிர்க்கும் வகையில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டலுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கைக்கும் குறைவான உணவுதான் ஆர்டர் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆபரேஷன் எம்டி பிளேட் என்று அழைக்கப்படுகிறது.

Recommended Video

    சீனாவில் தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம் | Clean Plate Campaign

    சீனாவில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் ஒரு பிரச்சாரத்தை துவக்கி வைத்து இருந்தார். அந்த பிரச்சாரத்தில், ''உணவை வீணாக்குவது கேவலமானது. சிக்கனம் செய்வது கவுரவமானது'' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த நாட்டில் பெரிய அளவில் உணவு வீணாக்கப்படுவதால், இந்த நடவடிக்கையை அந்த நாட்டு அரசு எடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

    Operation empty plate: Xi Jinping has launched a new campaign in China

    நமது தட்டில் இருக்கும் ஒவ்வொரு தானியத்துக்குப் பின்னரும் உழைப்பாளர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டு இருப்பதாக அந்த நாட்டின் ஜின்ஹுவா என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

    அதிபர் கூறியதாக இந்த செய்திதாளில் வெளியாகி இருக்கும் செய்தியில், ''உணவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதை ஒவ்வொரும் உணர வேண்டும். நடப்பாண்டில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் இதை மேலும் நமக்கு உணர்த்தி இருக்கிறது. ஏற்கனவே நாட்டில் அதிகளவில் மழை பெய்து விவசாயப் பயிர்கள் அழிந்து, உணவுக்கான இருப்பை குறைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சீனாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர் அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் சீனாவுக்கு கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆதலால், உணவு பாதுகாப்பை கண்காணிக்க வேண்டிய சூழல் அந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. சீனா 20% முதல் 30% வரை உணவு தானியங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

    பிரதமருக்கு தைரியமின்மை.. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு பயப்படுகிறது.. ராகுல் காந்தி ட்வீட்பிரதமருக்கு தைரியமின்மை.. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு பயப்படுகிறது.. ராகுல் காந்தி ட்வீட்

    இதேபோன்ற கட்டுப்பாடு அந்த நாட்டில் 2013ல் இருந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டலுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கையில், ஒரு பிளேட் உணவு குறைவாகவே ஆர்டர் செய்ய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு என் 1சிஸ்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் ஓட்டல்களில் அரை பிளேட் உணவு அல்லது சிறிய அளவிலான உணவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். உணவை மீதம் செய்தால், அதை பார்சல் செய்து கொடுக்க வேண்டும். ஜியான்னிங், ஹூபெய் மாகாணம், ஜின்யாங், ஹெனான் மாகாணம் ஆகிய இடங்களில் இந்த திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.

    English summary
    Operation empty plate: Xi Jinping has launched a new campaign in China
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X