For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க நைட் கிளப் கொலையாளிக்கு மனைவியும் உடந்தை? விரைவில் கைதாக வாய்ப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆர்லான்டோ நைட் கிளப்பில் தாக்குதல் நடத்தி 49 பேரை கொலை செய்த உமர் மதீனின் மனைவிக்கும், இந்த கொலை நடைபெற போவது குறித்து முன்கூட்டியே தெரியும் என சந்தேகிக்கும் போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உமர் மதீனின் 2வது மனைவி நூர் சல்மானுக்கு இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவரை கைது செய்து உரிய வகையில் விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

Orlando shooter's wife knew of attack, could soon be charged

என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து சல்மானுக்கு தகவல் இருந்திருக்கும் என தாங்கள் நினைப்பதாக அமெரிக்க செனட் உறுப்பினர் அன்குஷ் கிங் தெரிவிக்கிறார். இவர் செனட் உளவுத்துறை கமிட்டியின் உறுப்பினராகவும் உள்ளார்.

எனவே நூர் சல்மான் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. உமர் மதீனின் முதல் மனைவி, அவரை விட்டு விலகிவிட்டு பிரேசிலை சேர்ந்த ஒரு நபரோடு டேட்டிங் செய்து வருகிறார். அவர் உமர் மதீன் ஓரினச்சேர்க்கையாளர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The wife of the gunman who killed 49 people at an Orlando gay nightclub knew of his plans for the attack and could soon be charged in connection with the deadliest mass shooting in modern U.S. history, a law enforcement source said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X