For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு... மனைவியின் ‘பல்லை’ப் பார்த்து உளவு கேமரா என பயந்த பின்லேடன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தனது மனைவியின் மாற்றுப் பல்லை அமெரிக்காவின் உளவு கேமராவாக நினைத்து, அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடன் பயந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவராக பதவி வகித்து, பல்வேறு தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வந்த ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் அவரது சடலத்தை கடலில் அடக்கம் செய்து விட்டதாக அமெரிக்கா கூறிவருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒசாமாவின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் டிஸ்க்குகள் மற்றும் சில முக்கிய கோப்புகளை அமெரிக்க ராணுவத்தினர் அப்போது கைப்பற்றினர். அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா வெளியிட்டு வருகிறது.

சந்தேகம்...

சந்தேகம்...

அதன்படி, சமீபத்தில் வெளியான தகவலில், தன்னைச் சுற்றியுள்ள பொருட்களில் அமெரிக்காவின் உளவு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஒசாமாவிற்கு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் எப்போதும் அனைத்தையும் சந்தேகக் கண் கொண்டே கண்காணித்து வந்துள்ளார் ஒசாமா.

ரகசிய கண்காணிப்பு கேமரா...

ரகசிய கண்காணிப்பு கேமரா...

கடத்தப்பட்ட பிணையக்கைதிகளை விடுவிக்க பணம் கொண்டுவரும் சூட்கேஸ்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் என ஒசாமா சந்தேகித்துள்ளார். அப்படி, கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி விட்டுச் சென்ற ஒரு பணப்பெட்டியை அவனது பாதுகாவலர்கள் சம்மட்டியால் அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது.

மாற்றுப்பல்...

மாற்றுப்பல்...

இதேபோல், தனது மூன்று மனைவிகளில் ஒருவரின் வாயில் இருந்த மாற்றுப்பல்லையும் அவர் சந்தேகித்துள்ளார். பல் பிரச்சினை காரணமாக ஈரானில் உள்ள பிரபல பல் மருத்துவரிடம் மாற்றுப்பல் பொருத்தியுள்ளார் ஒசாமாவின் மனைவி.

ரகசிய கேமரா...

ரகசிய கேமரா...

அதன் தொடர்ச்சியாக ஒரு கோதுமைமணி அளவு நீளத்திலும், ஒரு சேமியா அளவு அகலத்திலும் இருந்த அந்த பொய்ப்பல்லுக்குள் அமெரிக்க உளவுத்துறையினர் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஒசாமாவிற்கு ஏற்பட்டுள்ளது.

மனைவிகளுக்குள் சண்டை....

மனைவிகளுக்குள் சண்டை....

முன்னதாக ஒசாமாவின் இருப்பிடம் அவரது மூத்த மனைவி மூலமாகத் தான் தெரியவந்திருக்க வேண்டும் என 2012ம் ஆண்டு பரபரப்புத் தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் சிறைக்குள் ஒசாமாவின் மனைவிகள் இருவருக்கும் இடையே சண்டை கூட ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
US drones were devastating the upper ranks of al-Qaida, his men were killing suspected spies, and Osama bin Laden wondered: Could an Iranian dentist have planted a tracking device in his wife's tooth?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X