For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்கார் வெற்றியாளர்... பழம்பெரும் நடிகர் கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார்

Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் விருது பெற்றவரும், கனடா நாட்டின் பழம்பெரும் நடிகருமான கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார். அவருக்கு வயது 91.

தி சவுண்ட் ஆப் மியூசிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ப்ளூமர். இப்படத்தில் மனைவியை இழந்தவராக, கேப்டன் ஜார்ஜ் வோன் டிராப் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் பலராலும் பேசப்பட்டவர் ப்ளூமர், இசை குடும்பம் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன் ஆஸ்திரியாவில் அவர்களின் ஆளுமை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அது. இந்த படத்தின் மூலம் ப்ளூமர் மிக பிரபலமடைந்தார்.

Oscar-Winning Actor Christopher Plummer Dies At 91

பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணம் செய்த இவர், வாழ்வின் பிற்பகதியிலேயே ஆஸஅகார் விருதினை வென்றார். கனெக்டிகட்டில் தனது மனைவி எலைனி டெய்லரடன் வாழ்ந்து வந்ததாக அவரது நீண்ட கால நண்பரும், மேனேஜருமான லூயி பிட் தெரிவித்துள்ளார்.

ப்ளூமர் பற்றி அவர் கூறுகையில், அவர் மிகவும் அற்புதமான மனிதர். தனது நடிப்பை மிகவும் மரியாதையுடன் நேசித்தவர். நகைச்சுவை மற்றும் இசை அவரது வார்த்தையில் தவழும் என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோமர் ப்ளூமர் 2012 ம் ஆண்டு, தி பிரினர்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதினை வென்றார்.

English summary
Veteran Canadian actor Christopher Plummer, whose decades-long career featured a star turn in "The Sound of Music" and an Oscar win late in life, has died, US media said Friday, citing his manager. He was 91.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X