For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு.. நிர்வாண போராட்டத்தில் குதித்த அமெரிக்க பெண்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக, அமெரிக்க குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசி வருவதை கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அந்நாட்டின் க்ளிவ்லேண்ட் பகுதியில் நிர்வாண போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் களம் இறங்கும் நிலையில், குடியரசுக் கட்சியின் சார்பில் தொழிலதிபர், டொனால்ட் டிரெம்ப் போட்டியிடவுள்ளார்.

தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் டொனால்ட் டிரம்ப், இஸ்லாமியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறிவருகிறார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

டிரம்ப்பின் பேச்சை கேட்டு, அவரை உலகின் ரட்சகர் என வர்ணித்து இந்து அமைப்புகள் டெல்லியில் டொனால்ட் ட்ரம்பின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி சர்ச்சையை கிளப்பின.

விமர்சனம்

விமர்சனம்

அதேநேரம், கொல்கத்தாவைச் சேர்ந்த டீ நிறுவனம் ஒன்று, டிரம்ப்புக்கு 6 ஆயிரம் கிரீன் டீ பாக்கெட்களை அனுப்பி, இதை குடித்து மனதை சுத்தப்படுத்திக்கொள்ளுமாறு குசும்பு செய்தது.

நிர்வாண போராட்டம்

நிர்வாண போராட்டம்

இந்நிலையில், அமெரிக்காவின் கிளிவ்லேண்ட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டொனால்டுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். கண்ணாடிகளை கொண்டு உடலை அரைகுறையாக மறைத்தபடி இந்த போராட்டம் நடைபெற்றது.

திருத்திக்கொள்ள எச்சரிக்கை

திருத்திக்கொள்ள எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப் பல நேரங்களில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது பேச்சுகளால் பல நேரங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது, என்று போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் தெரிவித்தனர்.

English summary
In a unique protest, more than 100 women stripped and posed naked with mirrors here on the eve of the Republican Convention beginning Monday (July 18) to say that the GOP's presidential nominee-in-waiting Donald Trump is not fit to rule the country, the AFP reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X