For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாரி சுருட்டிய சுனாமி.. இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் 1000 உடல்கள் புதைப்பு!!

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியான 1000க்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சுலேவேசி: இந்தோனேஷியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியான 1000க்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.

இந்தோனேஷியாவில் கடந்த 28ம் தேதி பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப்பெறப்பட்டது.

இதனால் சுனாமி ஏற்படாது என்ற தைரியத்தில் மக்கள் குடியிருப்புகளுக்கு திரும்பினர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் மாலையில் சுனாமி ஏற்பட்டது.

[ அடுத்த எம்ஜிஆர் ஆகிறாரா விஜய்? ]

சுனாமி தாக்கியது

சுனாமி தாக்கியது

இதன் காரணமாக கடற்கரையோரங்களில் அமைந்திருந்த குடியிருப்புகள் பெரும் நாசமடைந்தன. ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளை தோண்ட தோண்ட உடல்கள் வந்த வண்ணம் உள்ளன.

குவியல் குவியலாக உடல்

குவியல் குவியலாக உடல்

மருத்துவமனை, சர்ச் என பல இடங்களில் உடல்கள் குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்டு வருகிறது. சுனாமி தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 1200ஐ தாண்டியுள்ளது.

 34 குழந்தைகள் பலி

34 குழந்தைகள் பலி

சுலேவேசி நகரில் உள்ள சர்ச் ஒன்றில் 34 குழந்தைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 80 அறைகளை கொண்டஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்து அங்கு மேலும் 60 பேர் சிக்கியுள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தில் ராணுவத்தின் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொற்று நோய் பரவும் ஆபத்து

தொற்று நோய் பரவும் ஆபத்து

இந்நிலையில் மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பராமரிப்பது கடினம், மேலும் நீண்ட நாட்கள் அடக்கம் செய்யப்படாவிட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

ஒரே இடத்தில் புதைப்பு

ஒரே இடத்தில் புதைப்பு

இதன் காரணமாக ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சுமார் ஆயிரம் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. உடல்கள் மூட்டை மூட்டையாக ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

கொள்ளை

கொள்ளை

இதனிடையே உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவு மற்றும் தண்ணீர் முதலியவற்றுக்காக கடைகளை கொள்ளையடித்து வருகின்றனர். இவற்றை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Over 1000 bodies buried in a place at Indonesia hits earthquake and tsunami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X