For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூம்.. பூம்.. பூம்.. ரோபோடா... ரோபோடா... ஒரே இடத்தில் ஆடி கின்னஸ் சாதனை படைத்த 1,372 ரோபோக்கள்!

ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்

    ரோம்: இத்தாலியில் ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன.

    தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதன் செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சோபியா ரோபோவிற்கு சவுதியில் குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது.

    over 1300 robots dance in sync

    அந்தவகையில் ரோபோக்களை இசைக்கு ஏற்ப நடனமாட வைக்கும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் 1069 சிறிய அளவிலான ரோபோக்கள் ஒரே இடத்தில் நின்று நடனம் ஆடின. இது உலக சாதனை படைத்தது.

    இந்நிலையில், இந்த சாதனையை முடியடித்து இத்தாலியில் 1,372 ரோபோக்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு, நடனமாடி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    ஆல்பா 1 எஸ் ரகத்தைச் சேர்ந்த 40 செமீ உயரம் கொண்ட இந்த ரோபோக்கள் அலுமினியத்தால் செய்யப்பட்டு பிளாஸ்டிக்கால் மூடப்பட்டுள்ளவை. இசைக்கு ஏற்றார் போல் 1372 ரோபோக்களும் விதவிதமான நடன அசைவுகளை ஒரே மாதிரி செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.

    இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகி லாரன்சோ வெல்ட்ரி பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

    2016ல் சீனாவின் அப்டெக் என்ற நிறுவனம் ஒரே மாதிரி நடனமாடும் ரோபோக்களை காட்சிப்படுத்தி புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    video link :

    English summary
    A new Guinness record has been set in Italy for the most number of robots dancing simultaneously, where 1,372 tiny humanoids synced many different moves to music.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X