For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகப்போரில், ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய பயங்கர குண்டு கண்டுபிடிப்பு: பலத்த சேதம் தவிர்ப்பு

Google Oneindia Tamil News

ஹாங்காங்: இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட ஒரு டன் எடையுடைய குண்டை கண்டுபிடித்த ஹாங்காங் அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அதனை செயலிழக்கச் செய்துள்ளனர்.

ஏறத்தாழ பத்தாயிரம் போர் வீரர்கள் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் கடந்த 1939ல் தொடங்கி 1945ம் ஆண்டு வரை நடைபெற்றது. 1941ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலன் ஜப்பான் இப்போரில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானும், அமெரிக்காவும் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன.

அப்போது போரில் பயன்படுத்தப் பட்ட பயங்கரக் குண்டு ஒன்று தற்போது ஜப்பானின் ஹாங்காங் குடியிருப்புப் பகுதியில் கண்டுபிடிக்கப் பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போர்...

இறுதிப்போர்...

1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றி ஜப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாக ஜப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

குண்டு கண்டெடுப்பு....

குண்டு கண்டெடுப்பு....

இந்நிலையில், சீனாவின் ஹாங்காங் பகுதியில் ஹேப்பி பள்ளத்தாக்கு மாவட்டத்தில் நேற்று கட்டுமானப்பணிக்காக ஒரு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு டன் எடையுடைய வெடிக்கப்படாத ஒரு அமெரிக்க குண்டு பூமிக்கடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்கள் வெளியேற்றம்...

மக்கள் வெளியேற்றம்...

உடனடியாக இத்தகவல் குண்டுகள் செயல் இழக்க செய்யும் படைக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிபுணர்கள் குண்டு கண்டெடுக்கப் பட்ட பகுதியின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்த சுமார் 2260 மக்களை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

குண்டுகள் செயலிழப்பு...

குண்டுகள் செயலிழப்பு...

பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்பகுதி சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தகுந்த தற்காப்பு நடவடிக்கைகளோடு அங்கிருந்த குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டன.

பெருத்த சேதாரம் தவிர்ப்பு...

பெருத்த சேதாரம் தவிர்ப்பு...

ஒருவேளை இந்தக் குண்டுகள் எதிர்பாராத விதமாக வெடித்திருந்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகி மிகப்பெரிய உயிர் சேதங்களை விளைவித்து இருக்கும் என குண்டை செயலிழக்கச் செய்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கக் குண்டு....

அமெரிக்கக் குண்டு....

கடந்த 1941-ம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டன் நிர்வாகத்தில் இருந்தபோது ஜப்பான் அப்பகுதிகளுக்குள் ஊடுருவியது. அப்போது ஜப்பான் படைக்கு எதிராக அமெரிக்கா வீசிய குண்டுதான் பூமிக்கடியில் வெடிக்காமல் அப்படியே கிடந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

English summary
More than 2,000 people were evacuated and roads closed in central Hong Kong on Thursday after a World War II bomb weighing almost a tonne was discovered on a construction site, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X