For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானைகளின் உடல்களை தின்றதால் விபரீதம்.. 500க்கும் மேற்பட்ட அரியவகை கழுகுகள் மர்மமரணம்!

ஆப்பிரிக்காவில் யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம் அடைந்துள்ளன.

Google Oneindia Tamil News

கேப்டவுன்: ஆப்பிரிக்காவில் யானைகளின் சடலங்களைத் தின்ற 500க்கும் மேற்பட்ட அரிய வகை கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன.

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று யானைகள் வேட்டையாடப் பட்டன. அந்த யானைகளின் சடலத்தை அப்பகுதியில் இருந்த 500க்கும் மேற்பட்ட கழுகுகள் சாப்பிட்டுள்ளன. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 537 கழுகுகள் உயிரிழந்தன.

over 500 rare vultures die after eating poisoned elephants

கழுகுகளின் முக்கிய உணவே உயிரிழந்த விலங்குகளின் சடலத்தை உண்பது தான். ஆனால், யானைகளின் சடலத்தை சாப்பிட்டதால் கழுகுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த யானைகளின் உடல் முழுவதும் கலந்திருந்ததால், அவற்றை உண்ட கழுகுகளின் உடலுக்கும் அது பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யானைகளின் சடலங்களில் நச்சுத்தன்மைக்கான காரணம் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கழுகுகளில் 2 கழுகுகள் டவினி எனப்படும் மிக அரிய வகை கழுகுகள். மேலும் 468 கழுகுகள் வெள்ளை நிறம் கொண்ட அரிய வகைக் கழுகுகள் ஆகும். இந்த கழுகுகள் மிக மோசமான, ஆபத்து ஏற்படுத்தும் பறவை இனங்களில் ஒன்றாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் பட்டியலில் இடம் பெற்றுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நடப்பது ஆப்பிரிக்காவில் இது முதன்முறையல்ல. கடந்த 2016ம் ஆண்டு இதே போல், இறந்த யானையின் உடலைத் தின்ற இரண்டு சிங்கங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கழுகுகளும் பரிதாபமாக உயிரிழந்தன என்பது நினைவுகூரத்தக்கது.

English summary
More than 500 endangered vultures died of poisoning after eating the carcasses of three elephants killed by poachers in Botswana, the government said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X