For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே மாலையில் 235 பேர் பலி.. எகிப்தில் என்ன நடக்கிறது.. யார் நடத்திய தாக்குதல்.. ஏன்?

எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே மாலையில் 235 பேர் பலி.. எகிப்தில் என்ன நடக்கிறது.. வீடியோ

    சினாய் : எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 235 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

    எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று மாலை நிலைகுலைந்த அந்த தீபகற்பம் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

    இந்த ஒரு தாக்குதல் எகிப்த் வரலாற்றில் இல்லாத பல மாற்றங்களை அந்த நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறது. மொத்த எண்ணெய் வள நாடுகளும் நினைத்து பார்க்க முடியாத தாக்குதல் என்று இது குறிப்பிடப்படுகிறது. இந்த ஒரு தாக்குதல் அங்கு குறைந்தது 10 வருடங்களுக்காவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப்படுகிறது.

    தாக்குதல் எங்கு நடந்தது

    தாக்குதல் எங்கு நடந்தது

    எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் உள்ள மசூதி ஒன்றில் தான் அந்த தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. சினாய் பகுதியில் இருக்கும் 'பிர் அல்-அபேத்' என்ற மக்கள் அதிகம் உள்ள இடத்தில்தான் அந்த மசூதி இருக்கிறது. இந்த இடம் அதிக ராணுவ பாதுகாப்பு உள்ள இடம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் தீவிரவாதத்திற்கு பூர்விகம். நேற்று மாலை சரியாக பொது மக்கள் தொழுகை முடித்து வெளியே வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. தீவிரவாதிகள் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.

    எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது

    எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது

    சரியாக மதிய தொழுகை முடியும் நேரம் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. உள்ளே தொழுது மக்கள் கொண்டிருந்த போது ஒரு மனித வெடிகுண்டு மூலம் முதல் தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. அடுத்த நொடி வெள்ளை முகமூடிகளுடன் வந்த 8க்கும் அதிகமாக தீவிரவாதிகள் கண்மூடிதனமாக சுட்டு இருக்கின்றனர். இந்த தாக்குதலில் இறந்த 235 பேரில் 17 பேர் குழந்தைகள். இன்னும் 150க்கும் அதிகமான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

    வலிமை இல்லாத அரசு

    வலிமை இல்லாத அரசு

    முன்னாள் எகிப்த் ஜனாதிபதி முகமது மோர்சி பதவி விலகிய நாளில் இருந்து அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி. ஆனால் இவர் 2011 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தால் பதவி விலக்கப்பட்டார். அவருக்கு பதில் ராணுவம் 'அப்தேல் பஃட்டா எல்-சசி' என்ற நபரை பொம்மை ஜனாதிபதியாக நியமித்தது. அந்த நாள், அதே நாளில்தான் தான் எகிப்திற்கு மிகப்பெரிய கண்டம் ஆரம்பித்தது.

    அதிகமான தாக்குதல்

    அதிகமான தாக்குதல்

    ஜனாதிபதியாக அப்தேல் பஃட்டா எல்-சசி வந்த நாளில் இருந்து பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்தது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி இருந்தாலும் எந்த தாக்குதலிலும் பெரிய அளவில் ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படாமல் மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. நிறைய கொடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எகிப்தின் எல்லையை ஒரு எகிப்த் குடிமகன் கடப்பது என்பது சாவை தேடிப்போவதற்கு சமமாக இருந்தது.

    சினாயில் தாக்குதல் ஏன்

    சினாயில் தாக்குதல் ஏன்

    சினாயில் நடந்த தாக்குதலுக்கும் அந்த நாட்டு ஜனாதிபதியின் மோசமான அணுமுறைதான் காரணம். சினாய் பகுதியை அந்த நாடு எந்த விதத்திலும் கவனிக்காமல் இருந்து வந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீவிரவாத இயக்கங்கள் அந்த பகுதியை தங்கள் அறிவிக்கப்படாத தலைநகராக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த சினாய் பகுதியில் மட்டும் 6க்கும் அதிகமான தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஐஎஸ் இயக்கத்திற்கு பால் ஊட்டி வளர்க்கும் பகுதிகளில் சினாய் தீபகற்பமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    மசூதியில் ஏன் தாக்குதல்

    மசூதியில் ஏன் தாக்குதல்

    சினாயின் மசூதியில் நடந்த இந்த தாக்குதல் தான் அந்த நாட்டில் முதல்முறையாக மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதுவரை அங்கு நிறைய கிறுஸ்துவ ஆலயங்கள் குறிவைக்கட்டு தாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களும் கூட தாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட எந்த தீவிரவாதியும் மசூதியின் மீது தாக்குதல் நடத்தவில்லை. இந்த தாக்குதல் எகிப்த் அரசாங்கத்தை மட்டும் இல்லாமல் மொத்த இஸ்லாமிய நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

    யார் தாக்கப்பட்டார்கள்

    யார் தாக்கப்பட்டார்கள்

    இந்த மசூத்திக்கு இருக்கும் ஒரே சிறப்பம்சம் அங்கு வரும் 'சுஃபி' முஸ்லிம்கள்தான். எகிப்த் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய இனங்களில் சுஃபி இனம் மட்டும் மிகவும் வித்தியாசமானது. அவர்கள் மக்களிடம் இருந்து மிகவும் வேறுபட்ட மத சடங்குகளை கடைபிடிப்பார்கள். இந்த தாக்குதலில் இறந்த 235 பேரில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் சுஃபி இன முஸ்லிம்கள்தான்.

    யார் நடத்திய தாக்குதல்

    யார் நடத்திய தாக்குதல்

    எகிப்த் வரலாற்றில் இதுவரை நடக்காத இப்படிபட்ட தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. ஐஎஸ் அமைப்பு 10 மணி நேரம் ஆகியும் அமைதியாக இருக்கிறது. இதனால் எகிப்தில் இருக்கும் இன்னொரு முக்கியமான இயக்கமான 'எகிப்த் கிளர்ச்சி படை' இந்த குரூர தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கும் சுஃபி முஸ்லிம்களுக்கும்தான் பல நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது.

    English summary
    Terrorist attack Egypt mosque killed 235 civilians. More than 150 people got injured in this attack. No terror group has claimed the attack. The death toll may increase.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X