For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காணாமல் போன ஆட்டை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்த உரிமையாளர்

By Siva
Google Oneindia Tamil News

ஒமாஹா: அமெரிக்காவில் காணாமல் போன ஆட்டை ஃபேஸ்புக் மூலம் உரிமையாளர் கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாநிலத்தில் உள்ள ஒமாஹா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் காகே என்ற ஆட்டை வளர்த்து வந்தார். இந்நிலையில் ஆடு உரிமையாளர் வீட்டில் இல்லாத நேரம் வெளியே சென்றுவிட்டது.

Owner reclaims lost sheep found wearing a red-and-green holiday sweater with leads from Facebook!

வீட்டை விட்டு வெளியே வந்த சிவப்பு மற்றும் பச்சை நிற ஸ்வெட்டர் அணிந்த அந்த ஆட்டை நெப்ரஸ்காவைச் சேர்ந்த ஹ்யூமன் சொசைட்டியினர் காப்பாற்றினர். இந்த தகவல் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த உரிமையாளர் வந்து ஆட்டை தன்னிடம் அளிக்குமாறு கேட்டுள்ளார்.

அவர் அந்த ஆட்டுடன் தான் எடுத்திருந்த புகைப்படங்களை ஆதாரமாக காட்டி ஆட்டை வாங்கிச் சென்றார்.

இது குறித்து ஹ்யூமன் சொசைட்டியின் செய்தித்தொடர்பாளர் பாம் வீஸ் கூறுகையில்,

காகே எப்படி தப்பி வந்தது என்று அதன் உரிமையாளருக்கு தெரியவில்லை. அந்த ஆட்டை நாங்கள் இரண்டு கோழிகளுடன் ஒரு கொட்டகையில் அடைத்து வைத்திருந்தோம் என்றார்.

English summary
A lost sweater wearing sheep was found by its owner with leads from facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X