For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதலுக்கு மூளை.. ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை : பாக். நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

லாகூர்: 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்குக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் இந்த தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

லாகூருக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமோக் டோல் பிளாசாவில் 2019ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வரும். ஜமாத்-உத்-தாவா (ஜூடி) தலைவர் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத செயல்களுக்கு நிதி சேகரித்ததாக பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் 1997ன் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு வழக்கிலும் ஹபீஸ் சயீத்தின் உறவினர்கள் இக்பால் மற்றும் அஷ்ரப் ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Pak court hands down 10 years imprisonment to Lashkar boss Saeed in terror funding case

இந்நிலையில் "லாகூரின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் (ஏடிசி) இன்று ஹபீஸ் சயீத்துக்கு மேலும் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்ததாக இரண்டு வழக்குகளில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் சயீத்துக்கு எதிராக நீதிமன்றம் இதுவரை நான்கு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து ரூ .1,10,00 அபராதம் விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

அவரது நெருங்கிய கூட்டாளியான அப்துல் ரஹ்மான் மக்கிக்கு நிதி திரட்டிய வழக்கில் அவரது பங்கிற்காக ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

English summary
A Pakistan court has awarded a 10 year jail term to Mumbai 26/11 attack mastermind, Hafiz Saeed in two terror cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X