For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனப் பெருஞ்சுவர் போல எல்லையில் பெருஞ்சுவர்கட்ட திட்டம்... ஐ.நா.வில் இந்தியா மீது பாக். புகார்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பெருஞ்சுவர் ஒன்றை கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது என ஐ.நா.,வில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி ஐ.நா பாதுகாப்பு சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது... காஷ்மீர் என்பது சர்வதேச பிரச்னை. இதுகுறித்து ஏற்கனவே ஏராளமான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரச்னை இன்னமும் தீரவில்லை.

border

இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் - பாகிஸ்தான்., எல்லை 194 கி.மீ., நீளம் கொண்டது. இதன் நெடுகிலும் 10 மீட்டர் உயரத்தில் பெருஞ்சுவர் எழுப்பி, அதே எல்லையை சர்வதேச எல்லையாக காட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இந்தியாவின் இந்த முடிவு ஐ.நா., தீர்மானத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து இந்தியவெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, 'பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியது பற்றி இந்தியாவுக்கு தெரியும். ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையதுவின் யோசனைப்படியே பாகிஸ்தான் இந்த கடிதத்தை எழுதி உள்ளது.

இந்த கடிதம் தொடர்பாக ஐ.நா ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதே எமது முதல் கேள்வி. அவ்வாறு ஐ.நா.ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் இதற்கு இந்தியா பதில் அளிக்கும் என்றார்.

English summary
Introducing a new irritant into the bilateral ties, Pakistan has complained to UN Security Council alleging that India was building a wall along the Line of Control (LoC) in violation of the world body's resolutions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X