For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் இந்திய மாநிலம்தான்... ஒப்புக் கொண்ட பாக். அமைச்சர் குரேஷி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு காஷ்மீர் இந்திய மாநிலம்தான்... ஒப்புக் கொண்ட பாக். அமைச்சர் குரேஷி!-வீடியோ

    ஜெனிவா: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் மாநிலம்தான் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கூறிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

    நாடு விடுதலை அடைந்தது முதல் ஜம்மு காஷ்மீரை கபளீகரம் செய்வதில் குறியாக இருந்து வருகிறது பாகிஸ்தான். கடந்த 72 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாகவே பொய் பிரசாரம் செய்து வந்தது பாகிஸ்தான்.

    Pakistan Accepts Kashmir As Indian State

    ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கிறது என்பது வரலாறு. இத்தனை ஆண்டு காலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அனுமதித்தது.

    தற்போது இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சாசனப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான் தாமதம்.. காஷ்மீரிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்க தொடங்கியது பாகிஸ்தான்.

    ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக எந்த சர்வதேச அரங்கம் கிடைத்தாலும் அங்கு பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது பாகிஸ்தான். அந்த அரங்குகளில் இந்திய தரப்பில் பதிலடி தருவதும் நீடித்து வருகிறது.

    இதனடிப்படையில்தான் ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்திலும் காஷ்மீர் பிரச்சனையை ஆவேசமாக பேசினார் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி. இந்தியா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார் குரேஷி.

    இந்த அமர்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் எனக் குறிப்பிட்டார். 72 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதாவது இந்தியாவின் ஒரு மாநிலம்தான் ஜம்மு காஷ்மீர் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இது தொடர்பான குரேஷியின் பேட்டி இடம்பெற்றுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

    English summary
    Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi today accepted Kashmir is an Indian State of Jammu and Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X