For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த இக்கட்டான நேரத்திலும் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது.. ஏர் இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

கராச்சி: கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களின் சேவை பெருமை அளிப்பதாக ஏர் இந்தியாவை பாகிஸ்தான் பாராட்டி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை 206 நாடுகளில் 12லட்சத்துக்கும அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

pakistan appreciate air india flight due to medicine supply to germany

ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும், அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் சேவை பெருமை அளிக்கிறது என ஏர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் விமான பாராட்டு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு, நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியிருந்தது.

கொரோனா பீதிக்கு மத்தியில் அஸ்ஸாமில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம் கொரோனா பீதிக்கு மத்தியில் அஸ்ஸாமில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்.. மக்கள் அச்சம்

மும்பையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் பாகிஸ்தானின் வான்வெளியில் நுழைந்து சென்றது. அந்நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டே பாகிஸ்தானை கடந்து சென்றது.

அப்போது, விமானிகளை வியக்க வைக்கும்விதமாக விமான கட்டுபாட்டு அதிகாரிகள் பேசுகையில், அஸ்ஸலாமு அலைக்கும், கராச்சி கட்டுப்பாடு நிலையம், ஏர் இந்தியா நிவாரண விமானத்தை வரவேற்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் விமானத்தை இயக்குவது எங்களுக்கு பெருமையளிக்கிறது. எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பாராட்டினர்.

English summary
We are proud of you": Pakistan Air Traffic Controller praises Air India relief operations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X