For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்கிலில் இந்தியாவின் கழுத்தை நெரித்து விட்டோம், அவர்களால் மறக்க முடி்யாது.. முஷாரப் கொக்கரிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

கராச்சி: இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் பேசிஉள்ளார்.

1999ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின் பின்புலமாக செயல்பட்டவர் அப்போதய பாகிஸ்தானின் ராணுவ தளபதி முஷரப் ஆவார்.

பின்னர் பாகிஸ்தானில் 9 ஆண்டு காலம் ராணுவ ஆட்சி நடத்திய ஆட்சி செய்த அவர் தற்போது தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

Pakistan army 'caught India by throat' during Kargil war: Musharraf

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டிஅளித்தார். அப்போது இந்தியாவால் கார்கில் போரை மறக்கவே முடியாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கு தெரியாமலே 4 பகுதிகளில் நாங்கள், கார்கில் பகுதிக்குள் நுழைந்தோம், அதை அவர்கள் கண்டுபிடிக்க காலதாமதம் ஆனது.

இரண்டாம் கட்ட போர்வீரர்கள்தான் ஊடுருவினார்கள். ஆனால், அவர்களே, இந்தியாவின் கழுத்தை பிடித்து நெரித்துவிட்டனர். போருக்கு பிறகுதான், அந்த வீரர்களுக்கு ராணுவ அந்தஸ்தே கொடுத்தோம். இவ்வாறு முஷாரப் கூறினார்.

பர்வேஸ் முஷாரப் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது இது முதல்முறையல்ல.

English summary
Recalling the Kargil conflict, Pakistan's former military dictator General Pervez Musharraf on Sunday said the Pakistani army "caught India by throat" and that India will never forget the war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X