For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா போருக்கான விதைகளை தூவுகிறது.. பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    போருக்கான விதைகளை தூவுகிறது இந்தியா : பாகிஸ்தான் குற்றச்சாட்டு- வீடியோ

    இஸ்லாமாபாத்: இந்தியா போருக்கான விதைகளை தூவுகிறது என பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உலக நாடுகளிடம் ஆதரவு கோரி இறுதியில் எந்த நாடும் அதற்கு ஆதரவு தரவில்லை.

    இதையடுத்து பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டது. அங்கும் ஏமாற்றமே விஞ்சியது. இதனால் கடுப்படைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா மீது போர் மூளும் என தெரிவித்தார்.

    இம்ரான் கான்

    இம்ரான் கான்

    பின்னர் சில நாட்கள் கழித்து போர் என்றுமே ஒரு பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் இந்தியா மீது நாங்களாக போர் தொடுக்க மாட்டோம் என்றும் இம்ரான் கான் தனது நிலைப்பாட்டை மாற்றி பேசினார்.

    பிராந்தியம்

    பிராந்தியம்

    இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிப் கபூர் கூறுகையில், காஷ்மீரின் தற்போதைய நிலை இந்த பிராந்தியத்துக்கு மிகவும் ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் போருக்கான விதைகளை தூவும் வகையில் அமைந்துள்ளன.

    பொருளாதாரம்

    பொருளாதாரம்

    எங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு எங்களை பலவீனப்படுத்த முடியும் என இந்திய நினைக்கிறது. ஆனால் போர் என்பது வெறும் ஆயுதங்கள், பொருளாதாரத்தை மட்டும் கொண்டு நடத்தப்படும் சண்டை அல்ல. அது நாட்டுப்பற்றுடன் நடத்தப்படும் மோதல் என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

    கொள்கை ஏதும் இல்லை

    கொள்கை ஏதும் இல்லை

    அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கையில் சூழலுக்கேற்ப மாற்றம் வரலாம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கலாம். ஆனால் எங்களிடம் முதலில் பயன்படுத்தமாட்டோம் என்ற கொள்கை ஏதும் இல்லை என்றார்.

    English summary
    Pakistan Army Spokesperson says that India sprinkles seed to start war against Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X