For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”பாகிஸ்தான் குழந்தைகள் மீதான வெறியாட்டம் கோழைத்தனத்தின் உச்சம்”- ஐ.நா.சபை கண்டனம்

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள ராணுவத்தினர் நடத்தும் பள்ளிக்குள் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 138 மாணவர்கள் உள்பட 140 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

Pakistan: Ban Ki-moon condemns 'blood-curdling' violence

ஏதும் அறியா பள்ளிக் குழந்தைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல், பயங்கரவாதிகளின் கோழைத்தனத்தையே காட்டுகிறது.

இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அவர்கள் எந்தக் காரணங்களைக் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சட்டத்துக்கு முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The UN secretary general condemns a Taliban attack on a school in Peshawar, Pakistan, which left 141 people dead. Ban Ki-moon says the siege, which saw students held hostage, was 'an act of horror and rank cowardice.' He urges the Pakistani government to bring the Taliban perpetrators to justice
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X