For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரை விடுங்க.. பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்க.. இம்ரானுக்கு பாக். இளைஞர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தை விட்டுவிட்டு பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு இளைஞர் ஒருவர் அறிவுரை வழங்கும் வீடியோ வைரலாகி வருகின்றன.

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு கடந்த மாதம் நீக்கப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரித்ததில் மாநில அந்தஸ்தும் ரத்தானது.

பாஜக மாநில தலைவர் என்ன?.. தேசிய தலைவர் பதவி கொடுத்தாலும் ரஜினி ஏற்பது சந்தேகமே.. திருநாவுக்கரசர் பாஜக மாநில தலைவர் என்ன?.. தேசிய தலைவர் பதவி கொடுத்தாலும் ரஜினி ஏற்பது சந்தேகமே.. திருநாவுக்கரசர்

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த விவகாரத்தில் தங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கவலை கொண்ட பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு கவுன்சிலை நாடியது. ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சிம்லா ஒப்பந்தத்தின்படி அதில் 3-ஆவது நாடு தலையிட முடியாது என்றும் தெரிவித்துவிட்டது.

காஷ்மீருக்கு குரல்

காஷ்மீருக்கு குரல்

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு காஷ்மீருக்காக குரல் எழுப்ப அந்நாட்டு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சியும் காஷ்மீர் விவகாரம் குறித்து பொதுமக்களின் கருத்து கேட்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவை வீழ்த்த

இந்தியாவை வீழ்த்த

அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இளைஞர் ஒருவர் பேசியது வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில் பொருளாதாரத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்த வேண்டும்.

வீடியோ வைரல்

அப்போதுதான் பாகிஸ்தானின் குரலை உலக நாடுகள் கேட்கும். எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் காஷ்மீர் விவகாரத்தில் கவனம் செலுத்துவதை விட பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும் என அந்த இளைஞர் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

English summary
Pakistani boy says that Pakistan PM Imran Khan should concentrate on Economy before he raise voice or Kashmir issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X