For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பகீர்.. இரவோடு இரவாக ஏவுகணைகளை சோதனை செய்த பாக்.. அதிர்ச்சி வீடியோ.. என்ன செய்ய போகிறது?

பாகிஸ்தான் நேற்று இரவோடு இரவாக ஏவுகணைகளை விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Pakistan carried out night training launch

    இஸ்லாமாபாத்: நேற்று இரவோடு இரவாக பாகிஸ்தான் ஏவுகணைகளை விண்ணில் ஏவி சோதனை செய்துள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்தியா கடந்த சில வாரங்கள் முன்பு நீக்கியது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே கசப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    அதேபோல் குஜராத் வழியாக பாகிஸ்தான் கமாண்டோக்கள் இந்தியாவிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி கமாண்டோ அல்லது அவர்களிடம் பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள், நுழைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    குஜராத்திற்குள் நுழைய பிளான்.. கமாண்டோ தாக்குதலுக்கு பாக். திட்டம்.. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்!குஜராத்திற்குள் நுழைய பிளான்.. கமாண்டோ தாக்குதலுக்கு பாக். திட்டம்.. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்!

    மோசம்

    மோசம்

    இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக பாகிஸ்தான் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. கன்ஸ்நாவி என்ற பெயர் கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது. இது அனைத்து வகையான வெடிகுண்டுகளை கொண்டு பறந்து சென்று தாக்குதல் நடத்தும் சக்தி கொண்டது.

    வெற்றி

    வெற்றி

    290 கிமீ தூரம் வரை இந்த ஏவுகணைகள் சென்று தாக்குதல் நடத்தும். அதே சமயம் பாகிஸ்தானிடம் 1000 கிமீக்கும் அதிகமான தூரம் தாக்கும் ஏவுகணைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை சோதனையில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.

    ஆயுதம்

    இந்த ஏவுகணைகளில் இன்னொரு சிறப்பு, இதில் அணு ஆயுதங்களை வைத்தும் தாக்குதல் நடத்த முடியும். பாகிஸ்தானிடம் அணு ஆயுத தாக்குதலுக்கு பயன்படுத்த முடியாத ஏவுகணைகள் நிறைய இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் சரியாக மிக சக்தி வாய்ந்த, அணு ஆயுத தாக்குதலுக்கு பயன்படுத்த கூடிய ஏவுகணையை தற்போது பரிசோதனை செய்து உள்ளது.

    பெரிய சந்தேகம்

    பெரிய சந்தேகம்

    கண்டிப்பாக பாகிஸ்தான் சாதாரண சோதனை முயற்சிக்காக இதை செய்யவில்லை. பெரிய திட்டம் எதையோ மனதில் வைத்துதான் இப்படி செய்கிறது. பாகிஸ்தானுக்கு யாரோ நம்பிக்கை கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் தைரியமாக களமிறங்கி உள்ளது என்கிறார்கள்.

    English summary
    Pakistan carried out night training launch of the surface to surface ballistic missile yesterday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X