For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஸா பெண் புகைப்படத்தை காட்டி ஐ.நாவில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்

காஸா பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி ஐநாவில் பாகிஸ்தான் அசிங்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி காட்டிய புகைப்படம் பொய் என்பது அம்பலமாகி உள்ளது.

ஐ.நா.வின் ஆண்டு பொது சபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தானை வெளுத்துக் கட்டினார்.

Pakistan Caught Lying at UN, Tries to Pass Off Gaza Woman as Kashmiri Victim

அவரது பேச்சுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கு பதில் தரும் விதமாக பாகிஸ்தானின் ஐநா தூதர் மல்லிகா லோகி, இந்தியாவை தென்னாசிய பயங்கரவாதத்தின் தாயகம் என விமர்சித்தார்.

அத்துடன் காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் பெல்லட் குண்டு தாக்குதலுக்குள்ளான பெண்ணின் புகைப்படம் என ஒரு படத்தையும் காட்டினார் மல்லிகா லோகி. ஆனால் உண்மையில் அந்த படம் 2014-ல் பாலஸ்தீனத்தின் காஸாவில் எடுக்கப்பட்டதாகும்.

அப்படத்தை கார்டியன் ஏடு வெளியிட்டிருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அந்த படத்தை காஷ்மீரில் எடுத்தது என கூசாமல் பொய் சொன்ன பாகிஸ்தானுக்கு சமூக வலைதளங்களில் செம டோஸ் விழுந்து கொண்டிருக்கிறது.

English summary
Pakistan on Sunday brandished the photo of a woman with facial injuries at the United Nations General Assembly on Sunday. The country’s Permanent Representative to the UN Maleeha Lodhi claimed the woman was a victim of pellet gun injury in Kashmir. The claim, it turns out, was a blatant lie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X