For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இம்ரான்கான் பதவியிலிருந்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    இம்ரான்கான் இருந்தால் பாகிஸ்தானே போய்விடும்.. போராட்டக்காரர்கள் ஆவேசம்-வீடியோ

    இஸ்லாமாபாத்: இம்ரான்கான் பதவியிலிருந்து இன்னும் 2 நாட்களில் விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கெடு விதித்துள்ளனர்.

    பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் தலைமையிலான ஆட்சியில் பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்றுள்ளதாகவும் தவறான அரசுமுறை நிர்வாகம் ஆகியவற்றாலும் மக்கள் துயரத்தில் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதோடு நாடாளுமன்ற தேர்தலில் மோசடியில் ஈடுபட்டு இம்ரான்கானின் கட்சி ஆட்சியை பிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை மதத் தலைவர் ஜாமியர் உலேமா இ இஸ்லாம் பஸ்ல் இயக்கத் தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் முன்வைத்துள்ளார்.

    சிந்து மாகாணம்

    சிந்து மாகாணம்

    இம்ரான்கானை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர கடந்த மாதம் 27-ஆம் தேதி சிந்து மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி மாபெரும் பேரணியை மவுலானா தொடங்கி வைத்தார்.

    ஆதரவு

    ஆதரவு

    சுக்குர், முல்தான், குஜ்ரன்வாலா வழியாக கடந்து வந்த ஆசாதி என்ற இந்த பேரணிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த பேரணி நேற்று இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. இதையடுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.

    பாக்.இல்லாமல் போய்விடும்

    பாக்.இல்லாமல் போய்விடும்

    அப்போது அவர் பேசுகையில் இம்ரான் கான் ஆட்சியை விட்டு விலக வேண்டும். 2 நாட்கள் அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் பதவி விலகாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இம்ரான் கான் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார் மவுலானா.

    English summary
    Pakistan Cleric says that PM Imran Khan has to step down within 2 days as his bad governance leads to Economic slowdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X