For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்காகவே அணு ஆயுதங்களை தயாரித்துள்ளோம்.. பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி மிரட்டல்

இந்தியாவுக்காகவே குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவுக்காகவே குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கஹான் அப்பாஸி
தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் கஹான் அப்பாஸி ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் குறித்து அவர் விளக்கினார். தாங்கள் எதற்காக அணுஆயுதங்களை தயாரித்து வருகிறோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவே

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவே

பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடிக் கொடுக்கவே குறைந்த தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக கூறினார். மேலும் அணு ஆயுத சொத்துக்கள் மீது ஒரு மிக உறுதியான மற்றும் பாதுகாப்பான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு முறையை நாங்கள் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மிகவும் பாதுகாப்பான செயல்

மிகவும் பாதுகாப்பான செயல்

இது மிகவும் பாதுகாப்பான செயல் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணைம் மூலம் முழுமையான மேற்பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறை ஆகும் என்றும் அவர் கூறினார்.

20 ஆண்டுகளாக சாட்சி

20 ஆண்டுகளாக சாட்சி

கடந்த 20 ஆண்டுகளாக இது சாட்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானால் எந்த ஒரு தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் தயாரித்துள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றும அவை பரிசோதித்து பார்க்கப்பட்டது என்றும் அப்பாஸி கூறினார்.

பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு

பாகிஸ்தான் ஒரு பொறுப்பான நாடு

பாகிஸ்தான் ஒரு பொறுப்பான உலகளாவிய நாடு என்றும், கடந்த 15 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிராக தாங்கள் போராடி வருவதாகவும் அப்பாஸி தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போரிட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அணு ஆயுதங்கள் உள்ளது

அணு ஆயுதங்கள் உள்ளது

அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தீவிரவாதம் தான் பொதுவான எதிரி என்றும் அப்பாஸி கூறினார். தங்களிடமும் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும்
அது பற்றி சந்தேகம் இல்லை என்றும் அப்பாஸி தெரிவித்தார்.

எப்படி கையாள்வது எனத் தெரியும்

எப்படி கையாள்வது எனத் தெரியும்

அணுசக்தி கழிவுகளை எப்படி கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும் என்றார். 60 களின் முற்பகுதியில் ஆசியாவில் அணுசக்தி திட்டத்தை கொண்ட முதல் நாடுகளில் ஒரு அணுசக்தி திட்டம் இருந்தது என்றும் அவர் கூறினார்.

யாரும் கவலைப்பட வேண்டாம்

யாரும் கவலைப்பட வேண்டாம்

தாங்கள் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் அதை நிர்வகித்திருந்தால், அதை நாங்கள் தொடர்ந்து நிர்வகிக்க முடியும் என்று நினைக்கிறேன், என்றும் அப்பாஸி கூறினார். பாகிஸ்தானின் அணு ஆயுத தயாரிப்பு குறித்து உலக நாடுகள் கவலைப்பட வேண்டாம் என்றும் பிரதமர் அப்பாஸி தெரிவித்தார்.

English summary
Pakistan Prime Minister Shahid Khaqan Abbasi said today his country has developed short-range nuclear weapons to counter the Indian Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X