For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரிய ஆபத்து வரப்போகிறது.. சீனா - இந்தியா சண்டை பற்றி முதல்முறை மௌனம் கலைத்த பாக்.. என்ன சொன்னது?

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் உரசல் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் முதல்முறை கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பிரச்சனை நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறி வந்தது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா - இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகிறது.

அப்போ இந்த வருஷம் பூரா லுங்கியும் பனியனும் தானா... என்ன கொடுமை சரவணன் இது!அப்போ இந்த வருஷம் பூரா லுங்கியும் பனியனும் தானா... என்ன கொடுமை சரவணன் இது!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

அதோடு போருக்கு தயாராக இருங்கள் என்று சீனாவின் அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்து இருக்கிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் அபாயம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது. பாகிஸ்தான் இதில் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது. இதை பற்றி பாகிஸ்தான் ஏனோ தொடக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் உரசல் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தான் முதல்முறை கருத்து தெரிவித்துள்ளது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

அதன்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ள கருத்தில்., இந்த எல்லை பிரச்சனையை சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றது. ஆனால் இந்தியா இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து அனுமதி இன்றி நேபாளம் அருகே கட்டுமான பணிகளை செய்தது . இதுதான் பிரச்னைக்கு காரணம். அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படுவதுதான் இந்தியாவின் வழக்கம்.

மோசமான கொள்கை

மோசமான கொள்கை

அண்டை நாடுகளுடனான உறவு தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல கொள்கை கிடையாது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இப்படித்தான் இந்தியா பறித்தது. அங்கு அத்துமீறல்களை செய்யும் வகையில் இந்தியா இப்படி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுத்த முயன்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பலுசிஸ்தான் மூலம் பாகிஸ்தான் உள்ளே கலகம் விளைவிக்க நினைத்தது. உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நேபாளம் உடன் சண்டை

நேபாளம் உடன் சண்டை

இதுதான் அதற்கான நேரம். அதேபோல் இந்தியா நேபாளம் உடன் சண்டை போட்டு வருகிறது . தற்போது சீனாவுடனும் இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயம். பெரிய ஆபத்து இதனால் வர போகிறது. ஆசியாவின் அமைதி இதனால் பாதிக்கும், என்று குரேஷி குறிப்பிட்டு இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். இந்தியாவை விமர்சித்துள்ளார்.

இம்ரான் டிவிட்

இம்ரான் டிவிட்

இம்ரான் கான் தனது டிவிட்டில், இந்தியாவின் இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட அரசு மோசமான ஆதிக்க கொள்கை காரணமாகவும், நாசி செயல்பாட்டின் காரணமாகவும் அண்டை நாடுகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. குடியுரிமை சட்டம் மூலம் வங்கதேசத்தை இந்தியா சீண்டியது. லடாக் மூலம் நேபாளம், பாகிஸ்தான் , சீனாவை இந்தியா சீண்டி வருகிறது.

Recommended Video

    India - China இடையே போர் மூளும் அபாயம்? | Oneindia Tamil
    காஷ்மீர் அப்படி

    காஷ்மீர் அப்படி

    காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. அதேபோல் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி இந்தியா போர் குற்றங்களை செய்து வருகிறது. நான் ஏற்கனவே இது குறித்து எச்சரித்து இருக்கிறேன். பாசிச கொள்கை கொண்ட இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது. அவர் அண்டை நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் பெரிய பிரச்சனையாக மாறுவார்கள், என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

    English summary
    Pakistan for the first time talks about China and India clash Ladakh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X