• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டித்தள்ளும் நிதி நெருக்கடி.. இம்ரான்கான் வீட்டை வாடகைக்கு விடப்போகிறார்களாம்.. பாக்.அரசு அதிரடி

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடத் தயார் என்று பாகிஸ்தான் அரசு அதிரடியாக ஒரு முடிவை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.. இம்ரான் கான் 2018-ல் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றது முதலே, பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது....

கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறமும், பொருளாதார வீழ்ச்சி மறுபுறமும் என இரண்டு வித சிக்கல்களை சந்தித்து வருகிறது... இதனால், அந்நாட்டு ராணுவத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்! இந்தியாவில் நவம்பரில் கொரோனா 3-வது அலை உச்சம் பெறும்.. ஆய்வில் பரபரப்பு தகவல்.. ஷாக் ரிப்போர்ட்!

டாலர்

டாலர்

பாகிஸ்தானின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1800 கோடி டாலராக உள்ளது. ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த கரன்சியான பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 150 ரூபாய் என்ற அளவில் சரிந்தது. பாகிஸ்தானில், டொயோட்டா கார் உற்பத்தி பேக்டரி, பவர் சிமென்ட் நிறுவனம், நெஸ்ட்லே உட்பட பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. அங்கே, ஏராளமானோருக்கு வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

கண்காணிப்பு

கண்காணிப்பு

இதனால் தொடர்ந்து கிரே பட்டியலில் உள்ளது. அதாவது, பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடுத்து, சர்வதேச நிதி அமைப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு 2 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.. அதன்படி, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இந்த அமைப்பு, கருப்பு பட்டியல், கிரே பட்டியல் என இரு வகைகளாக பிரிக்கிறது.

கருப்பு பட்டியல்

கருப்பு பட்டியல்

கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள், ஒத்துழைக்காதவை என வகைப்படுத்தப்பட்டு, அதனுடன், நிதி தொடர்பான எந்த பரிமாற்றத்தையும் உலக நாடுகள் வைத்துக்கொள்ளாது. கிரே பட்டியலில் உள்ள நாடுகள், எந்த நேரத்திலும், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படலாம் என்ற எச்சரிக்கையுடன் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, உலக நாடுகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல், பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம், பிற நாடுகளுடன் வர்த்தக தொடர்பும் நிறுத்தப்படும் நிலை ஏற்படலாம்.

 நிதி உதவி

நிதி உதவி


அவ்வகையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது.. எனவே, இப்போதுவரை பாகிஸ்தான் கிரே பட்டியலில்தான் உள்ளது.. இதனால் எந்த உதவியையும் பெற முடியாத நிலைமையில் அந்த நாடு இருக்கிறது.

 சர்வதேச நிதியம்

சர்வதேச நிதியம்

கடந்த வருடம் மோசமான நிதிநெருக்கடியில் நாடு சிக்கியது. சர்வதேச நிதியத்திடம் உதவியும் கேட்டது.. ஆனால், சர்வதேச பாகிஸ்தான் கேட்டதும், உதவி செய்ய தயாராக இல்லை... எனவே, பாக். ராணுவம் தங்களது பட்ஜெட்டையும் குறைத்து கொள்ள தயாரானது.. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் செலவிடப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

சவால்கள்

சவால்கள்

ஏற்கனவே, ஏகப்பட்ட பாதுகாப்பு சவால்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் ராணுவத்தின் செலவையும் அன்றைய தினம் குறைத்து கொண்டது என்றாலும்,இப்போது நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பாகிஸ்தான் நிதிநெருக்கடியில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.. எனவே, இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்தை கல்வி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விடத் தயார் என்று பாகிஸ்தான் அரசு அதிரடியாக ஒரு முடிவை அறிவித்துள்ளது...

நெருக்கடி

நெருக்கடி

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால் அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக ஆடம்பரமான அரசு இல்லத்தில் பிரதமரும் ஆளுநர் மாளிகைகளில் ஆளுநர்களும் தங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.. "ஆளுநர் உள்ளிட்ட விவிஐபிக்கள் இனி அரசு சொகுசு பங்களாவில் வசிக்க மாட்டார்கள்.. அதற்கு பதிலாக, சாதாரண வீடுகளில்தான் வசிப்பார்கள். இதனால், மீதமாகும் பணத்தை வைத்து மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

3 ரூம்கள்

3 ரூம்கள்

இதையடுத்து, பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்து மூன்று அறைகள் அடங்கிய வீட்டில் குடியேறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் பங்களாவை பராமரிக்க அதிக பணம் செலவிட வேண்டி இருக்கிறது. அதனால், கல்யாணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பிரதமர் பங்களா வாடகைக்கு விடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. சமீபத்தில், இம்ரான் கானின் ராணுவ செயலர் வாசிம் இப்திகாரின் மகளின் திருமணம் பிரதமர் பங்களாவில் ஆடம்பரமாக நடந்தது. இப்போது அதே வீட்டை வாடகைக்கு விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

English summary
Pakistan Gov puts PM Imran Khan’s official home up for rent
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X