For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100வது கைதியை பாக். தூக்கிலிட்டது வெட்கக் கேடானது... வெளுக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல்!!

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று 100வது கைதி தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் வெட்கக் கேடானது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் சாடியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 154 பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

தூக்கு தடை நீக்கம்

தூக்கு தடை நீக்கம்

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாத வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

அதிரடி தூக்கு

அதிரடி தூக்கு

இத்தடை நீக்கத்துக்குப் பின்னர் அதிரடியாக பாகிஸ்தான் சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டுவது தொடர் கதையாக அரங்கேற்றப்பட்டது.

100வது கைதி தூக்கு

100வது கைதி தூக்கு

இந்நிலையில் 100வது கைதியை பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமையன்று தூக்கிலிட்டது. 2000ஆம் ஆண்டு இரட்டைக் கொலை வழக்கில் முனிர் ஹூசைன் என்பவன் இன்று தூக்கிலிடப்பட்டான்.

ஆம்னஸ்டி கண்டனம்

ஆம்னஸ்டி கண்டனம்

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்நடவடிக்கை வெட்கக் கேடானது எனவும் ஆம்ன்ஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

English summary
Pakistan on Tuesday carried out its 100th execution since lifting a moratorium on the death penalty last December, in what rights group Amnesty International described as a “shameful milestone”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X